பரீட்சை காலங்களில் மன அழுத்தத்தால் அவதிப்படுறீங்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்
பொதுவாகவே தற்காலத்தில் மாணவர்கள் தினசரி பாடசாலையில் கற்றுக்கொள்வதை வீட்டில் திரும்ப கற்பது கிடையாது.
அதிகரித்த சமூக வைலைத்தளங்களின் பெருக்கம் மற்றும் செல்போன் பாவனை அதிகரித்தமை போன்ற காரணங்களினால் கற்றலில் ஆர்வம் காட்டுவது மிகவும் குறைந்து வருகின்றது.
அதனால் பரீட்சை காலம் நெருங்கிவிட்டால் அனைத்து பாடங்களையும் ஒரே நேரத்தில் கற்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதனால் மாணவர்கள் அதிகளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
மனதில் அழுத்தம் இருந்தால், பரீட்சையை சிறப்பாக எழுத முடியாது. மாணவர்களின் செயல் திறனும் பாதிக்கப்படும்.
எனவே, அந்த மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சமாளிக்க உதவும் சில உணவுகளை சாப்பிடுவது இதற்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.இவ்வாறன உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டை
பொதுவாகவே புரதத்துக்கான சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. தினசரி முட்டை சாப்பிடுவது கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்தும்.
மேலும் மூளையின் செயற்பாட்மை மேம்படுத்தும். பரீட்சை நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்திற்கு முட்டை சாப்பிடுவது பெரிதும் துணைப்புரியும்.
மீன்
அடங்கியுள்ள ஓமேகா 3 மற்றும் ஜின்க் முளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. தினசரி உணவில் மீனை சேர்த்துக்கொண்டால் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் மன அழுத்தம் குறையும்.
பெர்ரி
பெர்ரி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகின்றது. இது மூளையின் செயற்பாட்டை சீராக்குவதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் ஏனைய பழங்களை விடவும் வைட்டமின் சி மிகவும் செரிவாக இருக்கும்.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும் மூளையை சுறுசுறுப்பாக இயக்குவதற்கு துணைப்புரியும்.
வால்நட்
மூளையின் ஆரோக்கியத்துக்கு வால்நட்ஸ் இன்றியமையாதது. இது மன அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |