சுகர் இல்லாமல் கேக் செய்ய தெரியுமா? இத கவனமாக பண்ணுங்க
பொதுவாக நமது வீடுகளில் உள்ளவர்களுக்கு காரத்தை விட இனிப்பான உணவுகளையே அதிகம் சாப்பிட பிடிக்கும்.
இனிப்பான உணவுகள் உடலுக்கு கெடு விளைவிக்கும் என்பது தெரிந்தாலும் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதிலும் கேக் என்றாலே உயிரையும் சிலர் கொடுப்பார்கள். கேக் விரும்பிகள் எப்போதும் விதவிதமான சுவையில் வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆனால் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது கோளாறு வந்து விட்டால் சர்க்கரை எடுத்து கொள்ளும் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும்.
அப்படியானவர்களுக்கு ஏற்ற கேக் சீனி இல்லாமல் செய்வது எப்படி? என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பேரீச்சம்பழம்- 20
- பால்- 2 கப்
- முட்டை - 2
- கோதுமை மா- 2 கப்
- உப்பு - 1/2 தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
- பட்டர்- கொஞ்சம்
- சாக்லேட் பவுடர்- 2 மேசைக்கரண்டி
- சர்க்கரை- 2 மேசைக்கரண்டி
- நட்ஸ்- தேவையான அளவு
கேக் செய்முறை
முதலில் கேக் செய்ய தேவையான அளவு பேரீச்சம்பழம் எடுத்து அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு பாலில் ஊற வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் கோதுமை மாவு, முட்டையின் மஞ்சள் கரு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். அதற்கு முன்னர் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து அடித்துக் கொள்ளவும்.
சீனி பயன்படுத்தாமல் அடிக்கும் பொழுது வெள்ளையாக வரும். அதனையும் நன்றாக போட்டு கலந்து கொள்ளவும். சர்க்கரை இல்லாமல் கேக் செய்யும் பொழுது கொஞ்சம் நன்றாக வராது அந்த காரணத்தினால் சர்க்கரை 2 கரண்டி போடலாம்.
அதனுடன் பால் அல்லது பட்டர் கொஞ்சமாக கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து பேக் செய்து எடுக்க வேண்டும்.
கேக் பேக் செய்வதற்கு முன்னர் நட்ஸ் கொஞ்சம் மேல் தூவினால் நன்றாக இருக்கும். இறுதியாக ஆவலுடன் எதிர்ப்பார்த்த சீனி இல்லாத கேக் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |