யாரெல்லாம் நாவல்பழம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
பொதுவாக அநேகமானவர்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் நாவல்பழம்.
இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
நாவல்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நாவல்பழத்தில் பழம் மட்டுமல்ல அதன் இலைகள், பட்டைகள், விதை போன்றவையும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கிறது. இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் நாவல்பழத்தை சாப்பிடக் கூடாது. அப்படியானவர்கள் யார் யார் சாப்பிடக் கூடாது என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நாவல்பழம் யார் சாப்பிட கூடாது?
1. இரத்த சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் நாவல்பழத்தை அளவோடு எடுத்து கொள்வது அவசியம். ஏனென்றால் நாவல்பழங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டவை.
2. நீரிழிவு நோயுள்ளவர்கள் நாவல்பழத்தை மறந்தும் தொடக் கூடாது. மீறி சாப்பிடும் போது சர்க்கரையின் அளவு குறைய ஆரம்பிக்கும்.
3. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், நாவல்பழம் சாப்பிடலாம். ஆனால் ஒரு அளவில் வைத்து கொள்ள வேண்டும். அதே சமயம், செரிமான பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்கள் முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
4. சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகளில் இருப்பவர்கள் நாவல்பழத்தை தவிர்க்க வேண்டும். உதாரணமாக முகத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் நாவல்பழம் சாப்பிடக் கூடாது.
5. கர்ப்பிணி பெண்கள் பழங்கள் சாப்பிட வேண்டும். ஆனால் கர்ப்பமாக இருப்பவர்கள் குறிப்பிட்ட சில பழங்களை தவிர்ப்பது நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வரிசையில் தவிர்க்க வேண்டிய பழங்களில் ஒன்று தான் நாவல்பழம். மற்ற பழங்கள் போல் நாவல்பழங்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாது. மீறினால் பக்க விளைவுகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |