கத்தரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
பொதுவாக பலருக்கு இருக்கும் விருப்பமான உணவுகளில் கத்தரிக்காயும் ஒன்று.
இந்த காய்கறி தமிழர்கள் சமைக்கும் அநேகமான உணவுகளுக்கு முக்கிய பொருளாக சேர்த்து கொள்ளப்படுகின்றது.
மேலும் கத்தரிக்காயில் விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
இருப்பினும் சில பிரச்சனை இருப்பவர்களுக்கு இது எதிர்வினையான பாதிப்புகளை தரக்கூடும்.
அந்த வகையில் கத்தரிக்காய் யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
1. செரிமான அமைப்பு ஏதாவது பிரச்சினையிருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கத்தரிக்காயில் இருக்கும் சில பதார்த்தங்கள் வாயுவை உருவாக்கும் என்பதால் அது சாதாரணமாக இருக்கும் செரிமானத்தை இன்னும் மோசமாக்கும்.
2. தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் அரிப்பு இப்படி ஏதாவது இருந்தால் அவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. மருத்துவர்களின் ஆலோசனைகளை மீறி நாம் சாப்பிடும் பொழுது சரும நோய்களை இது தீவிரப்படுத்தும்.
3. டிப்ரஷன் மாத்திரைகளை எடுத்து கொள்ளும் நோயாளர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. இது உடலுக்குள் சென்றவுடன் மனஅழுத்தம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.
4. தற்போது இருக்கும் பெண்கள் அதிகமாக இரத்த சோகை நீரால் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்ற நோயுள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இது இரத்த உற்பத்தியை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
காதலிக்கு கோடி கோடியாய் செலவு செய்யும் அமீர்.. ஏன் வீடியோ போட்டு பணம் கேட்டாரு? விளாசும் நெட்டிசன்ஸ்!
5. கண்களை சுற்றி அரிப்பு, எரிச்சல், பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் கத்தரிக்காய் சாப்பிட வேண்டாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |