யாரெல்லாம் கரும்பு சாறு குடிக்க கூடாது? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
ஆரோக்கியத்தை அளிக்கும் கரும்பு சாறு உடல்நலத்திற்கு நல்லது என்றாலும் யாரெல்லாம் இந்த ஜுஸை குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கரும்பு சாறு
கோடை காலத்திற்கு சிறந்த பானமாக இருக்கும் கரும்புச் சாறை மக்கள் அதிகமாக விரும்பி குடிக்கின்றனர். இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கோடையில், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. பல நன்மைகளைக் கொடுக்கும் கரும்பு சாறு யார் குடிக்கக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதில் அதிக அளவு இயற்கை சர்க்கரை சுக்ரோஸ் உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு பல சிக்கலை ஏற்படுத்துகின்றது.
உடல் எடை அதிகரித்து அதனை குறைப்பதற்கு முயற்சிக்கும் நபர்கள் கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதிக கலோரிகள் இருப்பதால் எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கின்றது.
தொண்டை வலி, சளி பிரசசினை இருந்தால் கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் கருமபுசாறு குளிர் தன்மையை கொண்டதால் பிரச்சினை இன்னும் தீவிரமாக வாய்ப்புள்ளது.
இதே போன்று நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்கள் கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை இன்னும் மோசமடைய செய்யுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |