இளநீரை யாரெல்லாம் குடிக்க கூடாது?
Diabetes
By Pavi
இளநீர் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தந்தாலும் அது சிலரின் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கவும் கூடும்.

இளநீரை யார் குடிக்க கூடாது?
இளநீரில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் எனப்படுகின்றது. இருப்பினும், இளநீர் குடிப்பதால் அனைவருக்கும் நன்மைகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறமுடியாது.
சிலருக்கு, இளநீர் குடிப்பதால் நன்மைக்கு பதிலாகத் தீமையும் ஏற்படலாம்.இதனால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் .ந்த நிலையில் யார் இளநீரை குடிக்க கூடாது என்பதை பார்க்கலாம்.

சிறுநீரக நோய்கள்
- சிறுநீரக நோயாளிகள் இளநீரைத் தவிர்க்க வேண்டும். இதற்கான காரணம் இளநீரில் கணிசமான அளவு பொட்டாசியம் உள்ளது.
- எனவே பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களால் இந்த அளவு பொட்டாசியத்தை வடிகட்ட முடியாது. இதனால்தான் சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள்
- நீரிழிவு நோயாளிகள் இளநீரை அளவோடு குடிக்க வேண்டும். உங்கள் இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அதிகப்படியான இளநீர் குடிப்பது இரத்தச் சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும்.
- மேலும், உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கனவே குறைவாக இருந்தால், இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும், காரணம் அது உங்கள் இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கக்கூடும்.

சளி மற்றும் இருமல் பிரச்சனைகள்
- இளநீருக்குக் குளிர்ச்சி தரும் தன்மை உண்டு, அதனால்தான் இது கோடைக்காலத்தில் அடிக்கடி மக்கள் வாங்கி குடிக்கின்றனர்.
- இருப்பினும், உங்களுக்குச் சளி, இருமல் அல்லது வைரஸ் தொற்று இருந்தால், நீங்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். உண்மையில், இளநீர் அதன் குளிர்ச்சி தரும் தன்மையால், சளி, இருமல் மற்றும் வைரஸ் தொற்றுகளை இன்னும் மோசமாக்கக்கூடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US