ராகியை யார் யாரெல்லாம் உணவில் சேர்த்து கொள்ள கூடாது! ஆபத்து தீவிரமடையும் எச்சரிக்கை
ராகி என்றழைக்கப்படும் கேழ்வரகில் நிறைய இரும்புச் சத்து இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
இதனால் ரத்த சேகை போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
ஆனால் சில மருந்துவ நிலைகளில் உள்ளவர்கள் ராகியை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
அப்படி யாரெல்லாம் ராகியை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
யார் ராகி சாப்பிட கூடாது
குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கேழ்வரகு சாப்பிடக்கூடாது என்றும் மீறி சாப்பிட்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இதனிடையே பொதுவாக கேழ்வரகு ஹைப்போ தைராய்டிசதிற்கு மோசமான தைராய்டு வீக்க காரணி சேர்மங்களைக் கொண்டுள்ளதால் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு போன்ற தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
கேழ்வரகை குளிர் காலங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் கேழ்வரகில் அதிகப்படியான குளிர்ச்சி நிரம்பி இருப்பதால் அது குளிர்காலத்தில் இன்னும் அதிகப்படியான குளிர்ச்சியாக்கி விடும்
அதனால் சளி, பசியின்மை, வயிறு வீக்கம், அஜீரணக் கோளாறு போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.