இந்த பிரச்சிகைகள் இருக்கா? அப்போ தவறியும் கத்தரிக்காய் சாப்பிடாதீங்க
பொதுவாகவே காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை பாதுபாக்கும்.
காய்கறிகளின் ராணியாக கருதப்படும் கத்திரிக்காய் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
இருப்பினும், சில பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கத்தரிக்காய் சாப்பிடுவதால் பல்வேறு பாதக விளைவுகளை ஏற்படுகின்றது. இப்படி யாரெல்லாம் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பலவீனமான செரிமான அமைப்பு
உங்களுக்கு பலவீனமான செரிமான அமைப்பு இருந்தாலோ அல்லது மெதுவாக செரிமானம் ஏற்படும் என்றால், நீங்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கத்தரிக்காய் உங்கள் செரிமானத்தை மோசமாக்குகிறது, ஏனெனில் அது வாயுவை உருவாக்குகிறது.
ஒவ்வாமை பிரச்சனை
தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய் தவிர்க்க வேண்டும். இந்த பிரச்னை இருந்தால் பொதுவாக, கத்தரிக்காயை சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள், உங்களுக்கு எந்த வகையான தோல் ஒவ்வாமை இருந்தாலும். இது உங்கள் பிரச்னையை இன்னும் மோசமாக்கும். எனவே இவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
மன அழுத்தம்
மனச்சோர்வு அல்லது பதட்டம் காரணமாக நீங்கள் மனச்சோர்வு மாத்திரைகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது. கத்தரிக்காய் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இது மாத்திரையின் வீரியத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது.
இரத்த சோகை
இரத்த சோகை உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. இதில் காணப்படும் நுகர்வு பண்புகள் குருதி உருவாக்கத்துக்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரத்த சோகையால் அதிகமாக பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே இது குறித்து பெண்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கண்களில் எரிச்சல்
உங்களுக்கு கண் எரிச்சல் அல்லது கண்களை சுற்றி அரிப்பு,பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளவே கூடாது.
மூல நோய்
உங்களுக்கு மூல நோய் இருப்பின் கத்தரிக்காய் பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும். எனவே மலச்சிக்கல் இருந்தால் கத்தரிக்காயை முற்றாக தவிர்த்துக்கொள்வது நல்லது.
சிறுநீரகத்தில் கல்
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கத்தரிக்காயை தொடவே கூடாது. கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட்டுகள் உங்கள் கல் பிரச்சனையை மோசமாக்கும் தன்மை கொண்டது. இதனால் சிறுசீரகம் மேலும் பதிப்படையக் கூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |