யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா? இந்த பிரச்சினை இருந்தா தவிர்த்திடுங்க
அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் பட்டியலில் வாழைப்பழம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
பல்வேறு நோய்களை போக்க வாழைப்பழம் பெரிதும் துணைப்புரிகின்றது. இருப்பினும் வாழைப்பழம் எடுத்து கொள்ளும் போது ஒரு சில விஷயங்களை கடைப்பிடிப்பது சிறந்தது.
இந்த வகையில் யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அமில வீச்சு மற்றும் வைட்டமின் சி இருப்பதால் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தும். மேலும், இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
நீரழிவு நோய் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் இதில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக காணப்படுகின்றது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சிறுநீரக கற்கள் அல்லது சீறுசீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை முற்றாக தவிர்த்துவிடுவது சிறந்தது.
வாழைப்பழங்களில் பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும் என்பதால் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் தீர்வு கொடுக்கும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குவதற்கு பதிலாக அதை மோசமாக்கி விடுகிறது.
குறிப்பாக பழுக்காத வாழைப்பழம் மலச்சிக்கலை தூண்டும் தன்மையை கொண்டுள்ளது. எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
வாழைப்பழத்தை சாப்பிடுவது பிடித்திருந்தாலும் குறிப்பிட் சிலருக்கு அதனால் அலர்ஜி ஏற்படும் என்ற நிலை காணப்டபடுகின்றது. லேடெக்ஸ் எனும் ரசாயனம் ஒவ்வாமையுடன் தொடர்புடையது.
இந்த பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டால் மூச்சு விடுவதில் சிரமம், அனாபிலாக்ஸிஸ் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.இதனால் வாழைப்பழத்தை தவிர்த்துக்கொள்வது நல்லது.
ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டியது முக்கியம். இது ஆஸ்துமா பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |