தன்னை விட வசதி படைத்த பெண்களை திருமணம் செய்த தமிழ் நடிகர்கள் யார் யாருனு தெரியுமா?
பொதுவாக நடிகர்கள் என்றால் அவர்கள் பணத்தை அடிப்டையாக வைத்து தான் திருமணத்தை செய்கின்றனர்.
அந்த வகையில் பல நடிகர்கள் கோடீஸ்வரர் வீட்டு சம்பந்தத்தை வைத்துள்ளனர். நம்மால் நம்ப முடியாத அளவிற்கு அது புதிராக உள்ளது.
இந்த சினிமா உலகில் உள்ள சில நடிகர்கள் தங்களை விட அதிக வசதி படைத்தவர்கள் வீட்டில் சம்பந்தம் வைத்துள்ளனர். அந்த வகையில் இதில் சில காதல் திருமணமும் அடங்குகின்றன.
கோடீஸ்வர வீட்டில் சம்பந்தம் வைத்த நடிகர்கள் யார் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கோடீஸ்வர வீட்டு சம்பந்தம்
1. நடிகர் ஆர்யா தன்னை விட 10 வயதில் குறைவான நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார்.
இவரின் குடும்பம் இந்தியாவின் கோடீஸ்வர குடும்பங்களில் சாயிஷாவின் குடும்பமும் ஒன்று. ஆர்யா விட சாயிஷா வசதியான இடத்தை சேர்ந்தவர்.
2. நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர். இவரிடம் சொல்லப்போனால் ஏராளமான சொத்துக்கள் இருக்கும். இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவரின் அப்பா தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகவும், அம்மா சீரியல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகின்றனர். மேலும் சமீபகாலமாக இவர்கள் படங்களையும் தயாரித்து வருகின்றனர். ஜெயம் ரவியை விட வசதி படைத்தவர்கள் ஆர்த்தி குடும்பத்தினர்.
3.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சங்கீதாவின் தந்தைக்கு லண்டனில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளது. விஜய்யை விட பல மடங்கு வசதியானவர் விஜயின் மாமனார்.
4.அருண் விஜய் இவரும் ஒரு நடிகர் இவரின் தந்தையும் ஒரு நடிகர். இவர்களிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறது. அருண் விஜய் ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆர்த்தியின் அப்பா அதாவது அருண் விஜய்யின் மாமனார் மிக பெரிய தொழிலதிபர், தயாரிப்பாளர் ஆவார். அருண் விஜய் குடும்பத்தை விட அவரின் மாமனார் வசதி படைத்தவராவார்.
5. நடிகர் தனுஷ் இவரின் திருமணம் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஐஸ்வர்யா தனுஷ் காதலித்த காரணத்தினால் தான் ரஜினி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். தனுஷை விட ரஜினி வசதி படைத்தவர் என்பது குறிப்பிட தக்கது.
6. நடிகர் பிரபுவின் வாரிசு விகரம் பிரபு வசதி படைத்தவராக இருந்தாலும் விக்ரம் பிரபுவின் மாமனார் சேலத்தில் மிக பெரிய தொழிலதிபர். இவர் தன்னுடைய பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |