கடவுள் உருவாக என்ன காரணம்? இது தான் நிதர்சனமான உண்மை- தெரிஞ்சிக்கோங்க!
தொன்று தொட்டு காணப்படும் ஒரு பிரச்சினையாக கடவுள் என்ற எண்ணக்கரு காணப்படுகின்றது.
கடவுள் யார் என்ற கேள்வியின் விளைவே இத்தனை மதங்கள் , கலாசாரங்கள், இத்தனை வழிப்பாட்டு முறைகள் ஆகியன எண்ணிலடங்கா கடவுளர்களின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.
ஒவ்வொரு கலாசாரத்திற்கும் மதத்திற்கும் ஏற்ப கடவுள்களும் வழிப்பாட்டு முறைகளும் மாறுப்படுகின்றது. உண்மையில் நாம் யாரும் கடவுளை பார்த்ததில்லை கடவுள் எப்படியிருப்பார் என யாராலும் உருவகிக்க முடியாது.
நீரை எந்த பாத்திரத்தில் ஊற்றுகின்றோமோ அந்த பாத்திரத்தின் வடிவத்தை நீர் பெற்றுக்கொண்டு அந்த பாத்திரத்தின் வடிவத்தில் தோற்றமளிக்கும். இதே போன்று நாம் எந்த மதத்தை பின்பற்றுகின்றோமோ அதற்கேற்ற வகையில் கடவுளும் வடிவம் பெறுகின்றார்.
நாம் பிறக்கும்போதே இங்கு இவ்வளவு பிரம்மாண்டமான படைப்பு காணப்பட்டது நிச்சயமாக எமக்கு தெரியும் இதனை நாம் படைக்கவில்லை. எம்மை போன்று இருக்கும் எமது பெற்றோரும் செய்திருக்க முடியாது.
எந்தவொரு மனிதனும் இவ்வளவு பிரம்மாண்டமான படைப்பை மேற்கொண்டிருப்பதென்பது அசாத்தியமானது. எனவே இதனை யார்? செய்தது என்பது எமக்கு தெரியாது.
கடவுள் உருவான கதை
இந்த தெரியாது என்பது தான் கடவுள் என்ற எண்ணக்கரு உருவாக காரணமாக அமைந்தது. நாம் மனிதர்களாக இருப்பதனால் தான் எமது எண்ணத்தின் அடிப்படையில் கடவுள் ஒரு மிகப்பெரிய மனிதன் என உருவகித்துக் கொண்டோம்.
இரண்டு கைகளைக் கொண்டு இவ்வளவு பெரிய படைப்பை மேற்கொள்வது அசாத்தியம். எனவே கடவுளுக்கு எட்டு கைகள் பத்து கைகள் என நினைத்து அவ்வாறான சிலைகளை மனித உருவில் செய்து வழிப்பட ஆரம்பித்தோம்.
கடவுளுக்கும் மனிதர்களுக்கு பெயர் சூட்டுவதைப் போல் பெயர் சூட்டினோம். இன்னும் சொல்லப்போனால் மனிதர்களில் ஆண் பெண் இருப்பதைப் போன்று ஆண் பெண் கடவுகளையும் உருவாக்கினோம்.
இதுவே ஒரு மிருகத்தின் உளவியல் அடிப்படை யில் சிந்தித்தால் மிருகத்தின் மனப்பாங்கில் கடவுள் மிகவும் சக்தி வாய்ந்த பெரிய மிருகம் என நினைக்கக்கூடும். உண்மையில் எங்களால் கடவுள் இப்படித்தான் என வரையறுக்க முடியாது.
எந்த கலாசாரத்தை நாம் பின்பற்றுகின்றோமோ அத்தகைய கடவுளை நாம் கொண்டிருக்கின்றோம். ஆனால் கடவுள் என்ற எண்ணக்கரு இத்தகைய வரையரைகளுக்கு அப்பாற்பட்டது.
அப்படியிருக்கும் போது கடவுள் இந்த அத்தனை படைப்பிற்கும் மூலமானவர் அதனை வரை விலக்கணப்படுத்துவதோ விளங்கிக்கொள்வதோ அத்தனை எளிமையான விடயம் இல்லை .
அது தவிர கடவுளுக்கு உருவம் இல்லை என கூறும் மதங்களும் கூட கடவுள் கூறியதாக வேத நூல்களை வைத்திருக்கின்றது. நாம் என்ன செய்கிறோம் என கடவுள் பார்த்துக்கொண்டிருக்கின்றார் நாம் தவறான விடயங்கள் பேசினால் இறைவன் தண்டனை வழங்குவார் என நம்புகிறது.
இதன் மூலம் மறைமுகமாக இறைவனுக்கு கண், காது, வாய் வைத்து கிட்டத்தட்ட மனித உருவத்தையே கொடுக்கின்றது. மனித குளத்திற்கு அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே மதங்கள் ஆனால் அதுவே மனிதர்களுக்கிடையில் பேதங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்க காரணமாக அமைந்துவிட்டதென்பது வருந்தத்தக்க உண்மை.
கடவுள் யார் அல்லது எப்படிப்பட்டவர் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் மனிதனிடம் தெரியாததை தெரியாது என ஒப்புக்கொள்ளும் பண்பு துளியளவும் கிடையாது.
அதன் விளைவே இன்று அத்தனை மதங்களின் தோற்றத்திற்கும் எண்ணற்ற கடவுளர்களின் உருவாக்கத்திற்கும் பிரதான காரணமாக அமைந்து விட்டது.
நாம் ஒருபோதும் கடவுளை வரை விலக்கணப்படுத்தவோ வடிவமைக்கவோ முடியாது. எங்களால் இந்த படைப்பை கொண்டு கடவுளின் சக்தியை உணர மட்டுமே முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |