எண்ணம் போல் வாழ்க்கை ... வார்த்தை இல்லங்க வாழ்க்கை
பொதுவாகவே மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையிலான வித்தியாசமே மனிதனால் சிந்தித்து செயல்பட முடியும் என்பதுதான், ஆனால் அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்தானது தான். மனிதனின் சிந்தனை எல்லைகளை தகர்த்தெறிய கூடியது.
எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக செயற்படுவது நமது சிந்தனை மட்டுமே. இதை எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? இந்த உலகத்தில் நம் செயல்களுக்கு தான் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு தவறான செயலை செய்துவிட்டால் சட்ட ரீதியாக அதற்கு தண்டனையும் வழங்கப்படுகின்றது.
ஆனால் எல்லா குற்றச்செயல்களுக்கும் மூலக்காரணம் நமது சிந்தனை தான். நாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சிந்திக்க முடியும். தவறான சிந்தனைக்கு சட்டரீதியாக சிறை தண்டனை கொடுத்தால் உலகில் குழந்தைகளை தவிர வேறுயாரும் வெளியில் இருக்க முடியாது என்பதே வருந்தத்தக்க உண்மை.
நல்ல சிந்தனையே சிறந்த வழிபாடு
சிந்தனைக்கு யாரும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. ஆனால் நமது சிந்தனையில் இருந்தே செயல்கள் பிறக்கின்றன. வார்த்தைகளும் சிந்தனையில் இருந்து தான் பெறப்படுகின்றது.
மொத்தத்தில் நம் சிந்தனையில் மாற்றம் கொண்டுவந்தால் மாத்திரமே சொல்லிலும் செயலிலும் மாற்றம் ஏற்படும்.
சிந்தனையை யாரும் கட்டுப்படுத்த முடியாது ஆனால் நம் பகுத்தறிவு கொண்டு அதை நாமே கட்டுக்குள் வைக்க வேண்டும்.
நாம் எதை சிந்திக்க வேண்டும் என்று நாம் தான் முடிவுசெய்ய வேண்டும். எப்போழுதும் நாம் சிந்தனைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ஏனெனில் ஒருவர் யாராக வேண்டும் என்பதை நமது சிந்தனையே தீர்மானிக்கின்றது. இதை தான் நம் முன்னோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என கூறியிருக்கின்றார்கள். நல்லதையே சிந்திப்போம் வாழ்கை நல்ல பாதையில் தானாக போக ஆரம்பிக்கும் என்பது உறுதி.
ஒருவன் எதை நினைக்கின்றானோ அதுவாகவே மாறுகின்றான், உண்மையில் நல்ல சிந்தனைகளை விட சிறந்த தியானமோ வழிபாடோ வேறேதும் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |