சிசேரியனுக்கு பின்னர் பெண்கள் செய்யக்கூடாதவை பற்றி தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே இன்றைய தலைமுறையின் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவம் என்றாலே, சிசேரியன் என்றாகிவிட்டது.
அதற்கு மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படும் காரணங்கள், `பெண்கள் ஒத்துழைப்பது இல்லை. இன்றைய பெண்கள் உடலளவில் பலவீனமாக இருக்கிறார்கள்' என்பதே ஆகும்.
இவ்வாறு சிசேரியன் மூலம் குழந்தை பிரசவித்த பெண்கள் அதன் பின்னர் தங்களின் உடல் ஆராக்கியம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
பொதுவாகவே சிசேரியனுக்கு பின்னர் பெண்கள் செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து பலருக்கும் குழப்பங்கள் நிலவுகின்றது. இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
சிசேரியன் பிரசவம்
சுகப்பிரசவத்தில் சில தினங்களிலேயே சாதாரண நிலைமைக்கு திரும்பிவிடலாம். ஆனால் சிசேரியன் பெண்களை உடல் அளவில் பாரிய மாற்றத்துக்கு உள்ளாக்குகின்றது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடலின் வெப்பநிலை போன்ற கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்.
எனிமா கொடுப்பது, சிறுநீர் வெளியேற கதீட்டர் சொருகுவது, உடலைச் சுத்தப்படுத்துவது, குளுக்கோஸ் சேலைன் ஏற்றுவது போன்ற முன் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படும். இதனால் பெண்கள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தையின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். கர்ப்பிணிக்குப் பொருத்தமான இரத்தம் தயாராக வைத்துக்கொள்ளப்படும். பொதுவாக, சிசேரியனுக்கு மூச்சு வழியாக தரப்படும் பொதுவான மயக்கம், முதுகில் ஊசி போட்டு பெறப்படும் முதுகுத் தண்டுவட மயக்கம் (ஸ்பைனல் அல்லது எபிடூரல்) ஆகியவை பயன்படுத்தப்படுவது நடைமுறை.
இவற்றில் பொதுவான மயக்கத்தில் கர்ப்பிணி உறங்கிவிடுவார். வலி தெரியாது. மற்ற மயக்கத்தில் கர்ப்பிணிக்கு நினைவு இருக்கும். குழந்தையை வெளியில் எடுப்பதைக் காண முடியும். என்றாலும் வலி தெரியாது.
சிசேரியனுக்குப் பின்...
சிசேரியன் செய்யப்பட்ட பிறகு 3 - 5 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும்.
இரண்டாம் நாளில் சாப்பிடத் தொடங்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாடிப்படி ஏறலாம்.
ஒரு மாதம் கழிந்த பிறகு பல வேலைகளை செய்ய முடியும். அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதை மட்டும் சில மாதங்களுக்கு தள்ளிப் போட வேண்டும்.
சிசேரியன் முடிந்த 6 மாதத்துக்குள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதத்திற்கு பின்னரும் வண்டி ஓட்டும்போது ஏற்படும் எதிர்பாராத அதிர்வுகள் கர்ப்பப்பையில் காயங்களை ஏற்படுத்தலாம், எனவே கவனமாகவும் பொறுமையாகவும் ஓட்ட வேண்டியது அவசியம்.
சிசேரியன் செய்த பெண்கள் அடுத்த குழந்தைக்கு 2-4 வருடங்கள் இடைவெளி தேவை. இரண்டாவது குழந்தைக்கான சிசேரியன் என்றால், குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், கருத்தடை அறுவை சிகிச்சைக்காக இன்னொரு முறை வயிற்றைக் கிழிக்க வேண்டியிருக்கும்.
சிசேரியன் செய்தபின் பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு மூன்று மாதங்கள் தேவை. இந்தச் சமயத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால், காயம் அதிகமாவதுடன், கர்ப்பப்பை பிரச்னைகளும் வரலாம். இன்ஃபெக்ஷன், அலர்ஜியும் உண்டாகலாம்.
எனவே, மூன்று மாதங்களுக்குத் தாம்பத்தியத்தைத் தவிர்த்துக்கொள்வது சிறந்தது. சில பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் வரை மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது.
இதுபோன்ற சூழலில் அடுத்த குழந்தை கருவுறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதால், முதலிலே மருத்துவரின் ஆலோசனை பெற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |