பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களுக்கு இவ்வளவுதான் சம்பளமா?
தற்போது பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டு வரும் விடயம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்துதான்.
படத்தின் பிரம்மாண்டத்தைப் போலவே அதில் தொழில்புரிபவர்களின் சம்பளமும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
ஆனால், அதிலும் குறைவாக சம்பளம் வாங்கியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்...
image - smart tamil trend
பிரபு
நடிகர் பிரபு இந்தத் திரைப்படத்தில் அநிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதாவது. சோழ இளவரசன் அருண்மொழி வர்மருக்கும் சோழ நாட்டினருக்கும் முக்கிய ஆலோசனைகள் வழங்கும் கதாபாத்திரம் இது.
இந்தப் படத்தில் நடிப்பதற்கு பிரபுக்கு 1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
image - smart tamil trend
பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மனின் தந்தையாக சுந்தரச் சோழராக நடித்திருப்பார்.
இதில் இவருக்கு 1.5 கோடி சம்பளம்.
image - OTTplay
ஐஸ்வர்யா லட்சுமி
சமுத்திரகுமாரி என்னும் பூங்குழலியாக படகோட்டி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதில் இவருக்கு 1.5 கோடி சம்பளம்.
image - Jsnewstimes
ஜெயராம்
இதில் ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்திருப்பார்.
படம் முழுவதும் நடித்திருந்திருந்தாலும் இதில் இவருக்கு சம்பளம் 1 கோடி மாத்திரமே.
image - Urban asian
சோபிதா துலிபாலா
இதில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அருண்மொழி வர்மனை திருமணம் செய்து கொள்வார்.
இதில் இவருக்கு 1 கோடி சம்பளம்.