கோடிகளில் உயர்ந்த கமலின் சம்பளம்! அடுத்தப்படத்திற்கு எத்தனை கோடி தெரியுமா? ஷாக்காகிடாதீங்க
விக்ரம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மட்டுமே 100 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் அந்த சம்பளத்தை நெருங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மீண்டும் உலகநாயகன் கமல் மாறியுள்ளார்.
வெள்ளித்திரையை பொறுத்தவரை நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து அவர்களுடைய சம்பளமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
4 வருடங்களுக்கு பிறகு வெளியான விக்ரம் படத்தின் வெற்றி உலகநாயகனின் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது.
விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் நிர்ணயித்துள்ள சம்பளம் 130 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உலகநாயகன் மாறியுள்ளார்.