காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு முன்னர் கமிட் ஆனது யார் தெரியுமா? அட இவரா..!
காதலுக்கு மரியாதை பாசிலின் இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாலினி ஜோடியாக நடிக்க 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம்.இத் திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவலொன்று தற்போது வெளியாகி உள்ளது.
காதலுக்கு மரியாதை
இளையராஜா இசையமைப்பில் வெளியான இப்பட பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்று வரும் படங்கள் அனைத்தும் எளிதாக 200 கோடி தாண்டுகிறது.
ஆனால் காதலக்கு மரியாதை திரைப்படம் அப்போதே உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூல் செய்ததாம்.
வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவர் காதலிக்கின்றனர், அந்த காதலால் சந்திக்கும் இன்னல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் ‘காதலுக்கு மரியாதை
பட்டி தொட்டி எங்கும் மாபெரும் ஹிட் அடித்த இந்த பாடம், இன்று 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்று.
இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களுமே இன்றும் பலரின் பிளேலிஸ்டில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு இயக்குனர் பாசில் முதலில் அணுகியது நடிகர் அப்பாஸிடம் தானாம், ஆனால் அவரது மேனேஜர் ஏற்கனவே பல படங்ளையே ஒப்புக்கொண்டு வைத்திருந்ததால் இந்த படத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேனேஜர் ஒப்பந்தம் செய்திருந்த படங்களில் இருந்து வெளியில் வந்த பிறகு பாசிலை அணுகுவதற்குள், பாசில் விஜய்யை காதலுக்கு மரியாதை படத்தில் புக் செய்துவிட்டாராம். ஒரு முக்கிய படத்தை மிஸ் பண்ணிவிட்டதாக அப்பாஸ் விரக்தியில் இருந்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |