இவங்களுக்கு கடன் கொடுக்காதீங்க.. அலையவிடும் ராசியினர்
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் பணம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
பணம் இல்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது. அப்படிப்பட்ட பணம் ஒரு மனிதரின் வாழ்க்கைக்குள் வராத வரையில் அன்பு, பாசம், கருணை இவை அனைத்தும் இருந்தது. ஆனால் தற்போது பாசம், அன்பு, கருணை, காதல் போன்ற விடயங்கள் இல்லாமல் சென்று பணம் என அழைக்கப்படும் வெறும் நோட்டு அதிகமான ஆதிக்கத்தை செலுத்துகிறது.
எவ்வளவு நெருக்கமான உறவு என்றாலும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் அந்த உறவில் நிச்சயம் ஒரு பிரச்சினை வரும். பணம் ஒரு மந்திரப் பொருளாக பார்க்கப்படுவதால் அது நிச்சயம் உறவினர்களுக்குள் பிரச்சினையை உண்டு பண்ணி விடும்.
அப்படி சிலர் தங்களின் செலவுகளை பார்த்துக் கொள்ள போதியளவு பணம் இல்லாத போது பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்குவார்கள்.
அந்த கடனை ஒரு சிலர் மாத்திரமே நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றக் கூடாது என நினைத்து வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பி கொடுப்பார்கள். ஆனால் நம்மிள் பலர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காது ஒழிந்தி திரிவார்கள்.
அப்படியாயின், ஜோதிட சாஸ்திரத்தின் படி, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் அலைய விடும் ராசியில் பிறந்தவர்கள் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
மீனம் | மீன ராசியில் பிறந்தவர்கள் கனவு காண்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இவர்களின் கற்பனைக்கு ஏற்ப கடனை வாங்கி வைத்து விட்டு எப்படி திரும்ப கொடுப்பது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள். அலட்சியமானவர்களாக இருப்பதால் இவர்களின் நோக்கம் நிறைவேறாது. மோதல் அல்லது விரும்பத்தகாத பணிகளை அதிகமாக செய்வார்கள். இது அவர்களின் கடன் சுமையை அதிகப்படுத்தும். |
தனுசு | தனுசு ராசியில் பிறந்தவர்கள் அந்தந்த நொடிகளை அனுபவிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வம் மற்றும் முன்னேற்றத்தில் அதிகமான கவனம் கொண்டிருப்பார்கள். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என பொறுப்புடன் இருக்கமாட்டார்கள் பணத்தைக் கடன் வாங்கும் பொழுது திரும்ப கொடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் நாளடைவில் அதனை மறந்து விடுகிறார்கள். |
சிம்மம் | சிம்ம ராசியின் பிறந்தவர்கள் கவனமாக இருப்பதை காட்டிலும் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சூரியனால் ஆளப்படும் இவர்கள் பரிசுகள் கொடுத்து ஆளை மயக்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். தற்பெருமை இவர்களை வாழ்க்கையின் பள்ளத்திற்கு அழைத்துச் செல்லும். கடன் வாங்குவதை வேலையாக செய்தவர்கள் பெரிய இடத்திற்கு சென்றதும் வாங்கிய கடன்களை மறந்து விடுவார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
