நாக்கு வெள்ளையாக மாறுகின்றதா? அப்போ ஆரோக்கியத்திற்கு பிரச்சினை
இன்று பலரும் பற்களை பாதுகாக்க முயற்சிக்கும் அளவிற்கு நாக்கினை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.
ஆம் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தினை நாக்கில் படியும் வெண்மை நிறம் அப்பட்டமாக காட்டிக்கொடுத்துவிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். லேசாக வெண்மை நிறமாக இருந்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
ஆனால் நாக்கு முழுவதும் வெண்மை அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் அது பெரும் ஆபத்து என்பதை மறக்க வேண்டாம்.
நாக்கு வெண்மையாக காரணம் என்ன?
வாய் சுகாதாரத்தை பேணாமல் விடுவது, புகைபிடித்தல், மரபியல் காரணம், காபி, டீ ஆகிய காபின் கலந்த பானங்களை அருந்துவது போன்ற காரணங்கள் ஆகும்.
நாவில் வெள்ளை பூச்சு உணவு துகள்கள், கிருமிகள், இறந்த செல்கள் காரணமாகவும் ஏற்படுகிறது.
எவ்வாறு சரிசெய்யலாம்?
நாக்கை சுத்தம் செய்வதற்கு நாக்கு வளிப்பானை(tongue cleaner) பயன்படுத்தலாம். இதனால் நாக்கில் இருக்கும் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் நீங்கும்.
பாக்டீரியாக்களை நீக்குவதற்கு தயிர் மாதிரியாக புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள் உதவி செய்கின்றது. புரோபயாடிக்குகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கும் வல்லமை கொண்டவை.
பூண்டின் சாற்றை எடுத்து நாக்கில் தவி 5 நிமிடம் கழித்து வாய் கொப்பளித்தால், பூஞ்சை மற்றும் கிருமி தொற்று நீங்கும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்புக்கல் சேர்த்து வாய்க் கொப்பளிப்பதுடன், தொண்டை வரை கொண்டு சென்று கொப்பளித்தால், வாயில் உருவாகும் கிருமிகள் மற்றும் நாக்கின் வெண்மையை நீங்கும்.
பழங்கால ஆயுர்வேத முறையில் முக்கியமாக இருப்பது ஆயில் புல்லிங். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை வாயில் விட்டு, 15 அல்லது 20 நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்கவும். இதனால் வாயிலிருந்து பாக்டீரியா, நாக்கின் வெண்மை நிறம் சரியாகும்.