பளபளப்பான பற்கள் வேண்டுமா?
புன்னகை என்பது எமக்கு ஒரு வசீகரத்தை தரக்கூடியது. அவ்வாறு நாம் ஒருவரைப் பார்த்து புன்னகைக்கும்போது நமது பற்கள் பளிச்சென்று வெண்மையாக அழகாக இருக்க வேண்டாமா?
பற்கள் வெண்மையாக இருப்பது மிகவும் முக்கியம். அதைவிடுத்து மஞ்சள் நிறத்தில் காணப்படுவது ஒருவித ஆரோக்கிய குறைபாட்டையும், கவனயீனத்தையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும்.
தற்சமயம் பற்களை வெண்மையாக வைத்திருக்க பல பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை நாம் எளிதாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க...
குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவும்.
தேநீர், கோப்பி, மதுபானம் சம்பந்தப்பட்ட உணவுப்பொருட்கள், திராட்சை சாறு, சோயா மற்றும் தக்காளி சோஸ் போன்ற பற்களில் மஞ்சள் கறையை உண்டாக்கும் அனைத்தையும் தவிர்த்தல் நல்லது.
தினமும் இரண்டு முறை பல்துலக்க வேண்டும்.
பல் துலக்கும்போது பல்லின் இடுக்குகளிலும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நாம் உண்ணும் உணவு அமிலத்தன்மை நிறைந்ததனால் இரண்டு முறை பல் துலக்குவது அவசியமாகின்றது. அதுமட்டுமின்றி பற்களின் வெண்மையை இது அதிகரிக்கவும் இது உதவும்.
ஒயில் புல்லிங்
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வாயில் ஊற்றி 10 நிமிடம் கொப்பளித்த பினனர், தண்ணீரினால் வாயைக் கழுவிவிட்டு, கடைசியாக பற்களை துலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பற்கள் சுத்தமாகவும் வெண்மையாகவம் இருக்கும்.