குழந்தைகள் உணவு சாப்பிட வெறுக்கிறார்களா? உடனடியாக செய்து கொடுங்கள் மேகி நூடுல்ஸ் ஆம்லேட்!
பொதுவாகவே குழந்தைகள் உணவுகளில் அறைகுறையாகத்தான் உண்பார்கள். ஆனால் அவர்களுக்கு பிடித்த உணவுகள் என்றால் வெறுப்பில்லாமல் சாப்பிடுவார்கள்.
அவ்வாறான உணவுகள் என்னென்ன என்பதை அறிந்துக்கொண்டாலே அவர்களுக்கு பிடித்தமான உணவுகள் சில வரிசையில் சேர்ந்து விடும்.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகியை நூடுல்ஸைக் கொண்டு ஆம்லேட் கொடுத்துப்பாருங்கள்.
மேகி நூடுல்ஸ் ஆம்லேட் எவ்வாறு செய்வதென்றுபார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மேகி பாக்கெட் - 1
- முட்டை - 2
- கேரட் துருவல் - 2 டீஸ்பூன்
- குடைமிளகாய் - 1
- தக்காளி - 1 (சிறியது)
- ப.மிளகாய் - 3
- வெங்காயம் - 1 (சிறியது)
- உப்பு, எண்ணெய் - சிறிதளவு
- மஞ்சள் - 1 சிட்டிகை
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மேகியை பாத்திரத்தில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர் இறுகும்வரை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள்.
தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள்.
சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள்.
திருப்பிப் போடாமல் மடித்தவாறே அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறலாம்.