உயிருக்கு உலைவைக்கும் வெள்ளை சர்க்கரை! எப்படி தயாரிக்காங்கனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் தேநீர், ஜுஸ் இவற்றிற்கு வெள்ளை சர்க்கரையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இது உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றது.
சீனி தயாரிக்கும் முறை
கரும்பிலிருந்து சாறு பிழியும் போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் ரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது.
பிழிந்த சாறில் லிற்றருக்கு, 200 மில்லி, வீதும் பாஸ்போரிக் அமிலம் கலந்து, 70 சென்டிகிரேட் அளவு சூடாக்கப்படுகின்றது. இந்த அமிலம் அழுக்கி நீக்கியமாக பயன்படுகின்றது.
பின்பு சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து, சல்பர் டை ஆக்சைடு செலுத்துகின்றனர். இதனை கொதிகலனில் அதிக வெப்பநிலையில் சூடாக்கும் போது, மண், சக்கை போன்ற கசடுகள் பிரிந்து, தெளிந்த கரும்பு சாறு கிடைக்கின்றது.
ஆனால், இது சத்துக்களை இழந்துவிடுகின்றது. அந்த சாறில், காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா கலந்து கொதிகலனில் அடர்த்தியாக்கப்படகின்றது.
அதில், சல்பர் டை ஆக்சைடு மற்றும் சோடியம் ஹைட்ரோ சல்பேட் போன்ற ரசாயனங்களை சேர்க்கப்படும் போது படிக நிலையில் வெள்ளை சர்க்கரை உருவாகிறது.
தீங்குகள்
இதனை நாம் உபயோகிப்பதால் குடலில் பாதிப்பு ஏற்படுவதுடன், பல்வலி, தலைவலி, உடல்பருமன், இதயநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.