கோவையில் மழை நீரில் அடித்து வரப்பட்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பு - வைரலாகும் விடியோ
கோவையில் அரிய வகை வெள்ளை நிற பாம்பு பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அரிய வகை வெள்ளை நிற பாம்பு
கோவை குறிச்சி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளை நிற நாகப்பாம்பு
கோவைவில் சிறிது நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கோவை குறிச்சி பகுதியில் மழை நீரில் ஒரு வெள்ளை நிற நாகப்பாம்பு அடித்து வரப்பட்டது.
இதைப் பார்த்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் வெள்ளை நிற நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட வெள்ளை நிற அரிய வகைப் பாம்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கோவையில் பிடிக்கட்ட வெள்ளை நிற நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறமாக மாறியதாக வன ஆர்வாலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மீட்கப்பட்ட வெள்ளை நிற பாம்பு வனத்துறையினரால் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
The Forest Department on Wednesday released a rare leucistic cobra, that was rescued by a volunteer of the Wildlife & Nature Conservation Trust from Kurichi in #Coimbatore, into the wild near Anaikatti. @THChennai pic.twitter.com/gzkgfPwEqV
— Wilson Thomas (@wilson__thomas) May 4, 2023