உடல் எடை சல்லி காசு செலவில்லாமல் குறைக்க என்ன செய்யலாம்?இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்!
பொதுவாக அதிக எடை கொண்டவர்கள் அதனை குறைக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருவார்கள்.
அந்த வகையில் வெள்ளை பூசணி சாறு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என மருத்துவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
ஜீம் என அலைந்து கொண்டிருப்பவர்கள் முறையான உணவு பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் எடையை இலகுவாக முறையில் குறைக்கலாம்.
இதன்படி, வெள்ளை பூசணிக்காய் எப்படி எடையை குறைக்கின்றது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
எப்படி வெள்ளை பூசணிக்காய் எடையை குறைக்கின்றது?
Image - Healthifyme
1. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலிலுள்ள நச்சுக்களை முதலில் வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் புதிய புதிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.
அந்த வகையில், வெள்ளை பூசணி சாறு ஒரு அதிசய பானமாக பார்க்கப்படுகின்றது. நச்சுக்களை ஒரு டம்பளர் ஜீஸ் வெளியேற்றுகின்றது.
2. உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் ஒரு வெள்ளை பூசணி சாறு குடிக்கலாம். ஏனெனின் வெள்ளை பூசணி சாறு குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் எடை இலகுவாக குறையும்.
3. வெள்ளை பூசணி சாறு ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயற்படுகின்றது. இதனால் இலகுவாக நச்சுக்களை வெளியேற்று விடும்.
4. வெள்ளை பூசணி சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமாண அமைப்பை சீராக பேணுகின்றது. இதனால் சமிபாடு முறையாக நடந்து எடை குறையும்.
5. சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆகிய ஊட்டசத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. இதனால் எடை குறைந்தாலும் நீங்கள் அழகாக தெரிவீர்கள். 6. உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வெள்ளை பூசணி தருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |