காரசாரமான காய்கறி வெள்ளைக்குழம்பு எப்படி செய்வது?
குழம்பு வகை என்றால் அது பொதுவாக காாரமாக மசாலாக்கள் எல்லாம் போட்டு ஒரு கபில நிறத்தில் இருப்பது தான் எங்களுக்கு தெரியும்.
இன்று நாம் பார்க்கப்போகும் குழம்பானது திருநெல்வேலியில் மிகவும் சுவையாகவும் பிரபலபமாகவும் செய்யக்கூடிய ஒரு ரெிபியாகும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தாரளமாக உண்ணலாம். இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் – 10
- முருங்கைக்காய் – 1
- கத்தரிக்காய் – 1
- வெண்டைக்காய் – 3
- மாங்காய் அல்லது தக்காளி – 4 துண்டுகள்
- வெந்தயம் – கால் ஸ்பூன்
- புளி – பெரிய எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
- கொத்தமல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
- கொத்தமல்லி தழை – கைப்பிடியளவு
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை – 2 கொத்து
- எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
- சின்ன வெங்காயம் – 3
- பூண்டு பற்கள் – 2
- சீரகம் – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் காய்கறிகள் எல்லாவற்றையும் சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் புளியை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸியில் தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சிறிதளவு தண்ணீர்விட்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து அதனுடன், நறுக்கிய முருங்கைகாய் மற்றும் கத்தரிக்காய் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெண்டைக்காய் வதங்கியதும் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலை கலந்து கொள்ளவேண்டும். பின்னர் கொஞ்ச நேரம் காய்கறிகளை வேகவிடுவதற்கு மூடி வைக்க வேண்டும்.
பின்னர் காய்கறிகள் வெந்தவுடன், மாங்காய் துண்டுகள் அல்லது நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
பின் அரைத்த தேங்காய் விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து 5 நிமிடங்கள் குழம்பு நன்றாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவேண்டும்.
இப்படி இறக்கி வைத்திருக்கும் குழம்பில் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடான குழம்பில் சேர்த்து மூடி வைக்கவேண்டும். இப்போது சுவையான வெள்ளை குழம்பு தயார்.