பாகற்காயை எப்படி கசப்பில்லாமல் வறுவல் செய்யலாம் தெரியுமா?
பாகற்காய் மரக்கறி வகைகளில் மிகவும் முக்கியமான ஒரு மரக்கறியாகும். ஆனால் இதன் சுவை கசப்பென்பதால் இதை குழந்தைகளும் ஏன் பெரியவர்கள் சிலர் கூட உண்ண மாட்டார்கள்.
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பாகற்காயை உடலுக்கு சேர்க்கும் வகையில் கசப்பு சுவை வராமல் ஒரு ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாகற்காய் - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- பூண்டு - 10 பல்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்புன்
- மிளகாய் தூள் - 2 ஸ்புன்
- கடுகு -1/4 ஸ்புன்
- கடலை பருப்பு - 1 1/2 ஸ்புன்
- சமையல் எண்ணெய் - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - சிறிதளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
பாகற்காயை முதலில் மெல்லியதாக வெட்டி அதை மோரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்துக்கொள்ளவும். கடுகு நன்கு வெடித்ததும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர் அதனுடன் கடலை பருப்பு போட்டு நன்கு சிவக்கவேண்டும். இதன் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
பின்னர் தக்காளி சேர்க்க வேண்டும். இதை நன்றாக வதக்க வேண்டும். பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசம் போனவுடன் நறுக்கி வைத்துள்ள பாகற்காயை போட்டு மசாலாவுடன் சேரும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து சிறது நேரம் மூடிவைத்து வேகவிடவும்.
பாகற்காய் நன்கு வெந்து வதங்கியவுடன் இறுதியாக அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இவ்வாறு செய்து இறக்கினால் சுவையான பாகற்காய் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |