வெள்ளை முடியை விரட்டி கருமையான முடியைப் பெற ஒரு முட்டை போதும்: வீட்டிலேயே செய்யலாம் ஹேர் டை!
பொதுவாக இன்றைய பலருக்கு இருக்கும் பிரச்சினை வெள்ளை முடிதான். குறிப்பாக இளைஞர்களுக்கு இளநரையும் ஒரு பிரச்சினைதான்.
இந்த இளநரை பிரச்சினைகள் தீர்ப்பதற்கு மிகவும் இலகுவான தீர்வொன்று உள்ளது. மிகவும் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த இளநரை போக்க ஹேர் டை செய்யலாம்.
முக்கியமாக இயற்கை வழிகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. அதோடு தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.
அந்த வகையில் வீட்டிலே செய்யும் ஹேர் டையை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை – 1
- கற்றாழை ஜெல் – 3 கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 2 கரண்டி
- விட்டமின் E மாத்திரை – 1
செய்முறை
ஒரு சுத்தமான பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மூன்று ஸ்பூன். (குறிப்பு: கற்றாழை ஜெல்லை கடையில் வாங்க வேண்டாம் இயற்கையான முறையில் வளர்ந்த கற்றாழையை 1/2 மடலை எடுத்து தோலை நீக்கிவிட்டு காய் சீவும் பலகையால் சீவி கொள்ளுங்கள்.)
பிறகு அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை உடைத்து ஊற்றவும்.
பின் அதனுடன் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் மற்றும் ஒரு வைட்டமின் E மாத்திரை ஒன்று ஆகியவற்றை செய்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
அவ்வளவு தான் ஹேர் டை தயார், இதனை தலையில் அப்ளை செய்து 20 நிமிடம் காத்திருக்கவும். 20 நிமிடம் கழித்து தலையை அலசவும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர நரைமுடி கூடிய விரைவில் கருமையாக மாற ஆரம்பிக்கும்.