மயோனெய்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பா? பச்சை முட்டையால் வரும் ஆபத்துகள்
ஷவர்மா, சமோசா, மோமோஸ், சிக்கன் வறுவல் ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிடும் மயோனைஸ் வெள்ளை நிற பசை போல் காட்சியளிக்கும்.
மயோனைஸ் பச்சை முட்டை, காய்கறி எண்ணெய், வினீகர் மற்றும் சில பொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுவதால் இது உடலுக்கு ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை பலரும் நமக்கு அறிவுறுத்திருப்பார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மயோனைஸிற்கு தமிழகத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மயோனைஸ் தடைக்கு அதன் தயாரிப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல ஏற்கெனவே ஐதராபாத்தில் மயோனைஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்ததன் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டது.
அந்த வகையில், மயோனைஸால் வரும் பாதிப்புகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் தடையா?
மயோனைஸ் பச்சை முட்டை, காய்கறி எண்ணெய், வினீகர் மற்றும் இதர பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுவது தான் மயோனைஸ். ஷவர்மா போன்ற உணவுகளுக்கு இதை சைட் டிஷ் ஆக பரிமாறுகின்றனர்.
பச்சை முட்டை கொண்டு மயோனைஸ் தயாரிக்கப்படுவதால் எளிதில் பழுதடைவதற்கான வாய்ப்புள்ளது. மயோனைஸில் சால்மோனெல்லா உள்ளிட்ட சில பாக்டீரியாக்கள் வளர்கின்றன.
இது முறையற்ற தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் முறை உள்ளிட்ட காரணங்களால் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். இதனை சாப்பிடும் ஒருவருக்கு பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதனால் தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறை மயோனைஸ் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.
உயிருக்கு ஆபத்து
பச்சை முட்டையால் தயாரிக்கும் மயோனைஸ் முறையாக பதப்படுத்துவது அவசியம். இதனை விற்பனை செய்யும் பலரும் பதப்படுத்துவதில் தவறு செய்து விடுகிறார்கள்.
ஐதராபாத்தில் மயோனைஸ் சாப்பிட்ட பெண் உயிரிழந்த நிலையில் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர். உயிருக்கு போராடிய குறித்த பெண் உயிரழந்து விட்டார். இதனால் அந்த பகுதியில் மயோனைஸ் சாப்பிடுவது தடைச் செய்யப்பட்டுள்ளது.
பாதிப்புக்கள்
1. மயோனைஸில் அதிக அளவு ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதனை அதிகப்படியாக சாப்பிடும் பொழுது உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் வரலாம். இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சுவையாக இருப்பதால் மயோனைஸை குழந்தைகள் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
2. மயோனைஸில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் நுகர்வு எடை அதிகரிப்பு பிரச்சனை ஏற்படும். மயோனைஸ் சாப்பிடும் ஒருவருக்கு விரைவான எடை அதிகரிப்பு ஏற்படும்.
3. மயோனைஸ் அதிகளவு எடுத்து கொண்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், நீரிழிவு அபாயம் உள்ளது.
4. ஒரு டீஸ்பூன் மயோனைசில் 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இதனை தொடர்ச்சியான உட்க் கொண்டால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால் இதய நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |