வெள்ளை முடியை கருப்பாக மாற்ற வேண்டுமா? இந்த ஒரு ஆயில் போதும்
இன்று வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு பல வழிகளில் முயற்சித்து வரும் பெண்களுக்கு ஸ்பெஷலாக டிப்ஸ் தான் இந்த பதிவு.
இண்டிகோ பவுடன் என்று அழைக்கப்படும் அவுரி இலை பொடியை வைத்து வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் எண்ணெய் எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய்- 5
- சின்ன வெங்காயம்- 5
- அவுரி இலை- ஒரு கப்
- மருதாணி இலை- அரை கப்
- கரிசலாங்கன்னி- அரை கப்
- வேப்பிலை- கால் கப்
- செம்பருத்தி இலை- கால் கப்
- கறிவேப்பிலை- கால் கப்
- வெந்தயம்- ஒரு ஸ்பூன்
- கருஞ்சீரகம்- ஒரு ஸ்பூன்
- ஆவாரம்பூ- ஒரு ஸ்பூன்
- ரோஜா இதழ்- ஒரு ஸ்பூன்
- வெட்டிவேர்- ஒரு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 3 லிட்டர்
செய்முறை:
முதலில் நெல்லிக்காய் மற்றும் வெங்காயத்தை அரைத்து எடுத்து அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய்யில் பாதி அளவை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் சாற்றை சேர்க்கவும்.
எண்ணெய்யில் சலசலப்பு அடங்கிய பின்பு, அவுரி இலை, கரிசலாங்கன்னி இலை, வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலை இவற்றினை அரைத்து கொதிக்கும் எண்ணெய்யில் சேர்க்கவும்.
அதவுடன் வெந்தயம், கருஞ்சீரகம், ஆவாரம்பூ, வெட்டிவேர், ரோஜா இதழ் இவற்றையும் பொடி செய்துவிட்டு அதையும் கொதிக்கும் எண்ணெய்யில் சேர்க்கவும்.
தொடர்ந்து மீதம் உள்ள எண்ணெய்யையும் ஊற்றி காய்ச்சி எடுத்தால் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் எண்ணெய் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |