ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?
ஒரு மாதத்திற்கு தொடர்ந்து டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன மாற்றம் ஏற்படும் என்ற பதிவே இதுவாகும்.உலகில் பெரும்பாலான மக்களின் பிடித்தமான பானம் என்றால் அது தேநீர் தான்.
காலையில் எழுந்ததும் பல்துலக்கிவிட்டு சுறுசுறுப்பை பெறுவதற்கு தேநீரை குடிப்பதை நம்மில் பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
நாள் ஒன்றிற்கு இரண்டு டீ பருகுவது தவறு கிடையாது. அதுவே அளவுக்கு அதிகமாக குடித்தால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இவ்வாறான சூழ்நிலையில் ஒரு மாதம் மட்டும் நீங்கள் டீ குடிக்காமல் நிறுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டீ-யை தவிர்ப்பதால் பலன்கள்
ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால், நமது உடம்பில் காஃபைன் உட்கொள்ளல் குறைவதுடன், இதனால் பதற்றம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் கிடைக்கின்றது.
டீயில் டையூரிடிக் விளைவுகள் இருப்பதால் நமது உடம்பில் இருக்கும் நீர்ச்சத்தை குறைக்கின்றது. டீ குடிப்பதை நிறுத்தினால் டீஹைட்ரேஷன் பிரச்சினையும் குறையும். செரிமான பிரச்சினை மற்றும் சில வகையான புற்றுநோய் செல்களையும் தடுக்கின்றது.
டீ குடிக்காததால் பக்கவிளைவு என்ன?
டீ குடிப்பது சிலருக்கு சௌகரியம் மற்றும் ஒருவித ஓய்வை அளிப்பதால், இதனை நிறுத்தினால் மன ரீதியான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுடன், நீண்ட நாட்கள் இது நீடிக்கவும் செய்கின்றது.
டீயை அதிகமாக உட்கொள்வது நீண்டகால உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துவது உடலில் பல குறிப்பிடத்தக்க நல்ல ஆரோக்கிய மாற்றங்களை கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |