நரைமுடியை நீக்கி கருமுகில் போன்ற கூந்தல் வேண்டுமா? இதை ஷாம்பூவில் கலந்தால் போதும்
இன்றைய நவீன காலத்தில், வெள்ளை முடி என்பது ஒரு சாதாரண பிரச்சனையாகிவிட்டது. இதைச் சமாளிக்க, மக்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த சிகிச்சைகள், முடி நிறம் மற்றும் ரசாயனப் பொருட்களை நாடுகிறார்கள்.
ஆனால் இந்தப் பிரச்சனையை இயற்கையான வழியிலும் தீர்க்க முடியும். இந்த பொருட்கள் மூலம் நமது தலைமுடி ஆரோ்கியமாக இருப்பதுடன் வளர்ச்சியும் அதிகமாகும்.
அந்த வகையில் இப்போது இயற்கையில் சில பொருட்கள் வைத்து அதன் பலன்களை ஒன்றாக சேர்த்து நமது முடியில் அப்பிளை செய்தால் என்னனென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடியை கருப்பாக்கும் பொருட்கள்
கருஞ்சீரகம்: இது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது முடி நரைப்பதைத் தடுக்கவும், முடியை கருப்பாக்க உதவும். மருதாணி இலைகள்: இது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுத்து கருமையாக்கிறது.
இது இயற்கையில் முடியின் அரொக்கிய வழியில் ஒன்றாகும். கற்றாழை ஜெல் - இது உங்கள் தலைமுடியை மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. முதலில், இரண்டு தேக்கரண்டி கருஞ்சீரக விதைகளை ஒரு இரும்பு பாத்திரத்தில் குறைந்த தீயில் நன்கு வறுக்கவும்.
அதிலிருந்து வாசனை வர ஆரம்பிக்கும் வரை வதக்கிக் கொண்டே இருங்கள். இதன் பின்னர் இதை தனியே எடுத்து வைக்க வேண்டும். அதே பாத்திரத்தில் மருதாணி இலைகளை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.
இதை ஒரு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது இந்த பொடி மற்றும் மருதாணியுடன் கற்றாழை ஜெல் மற்றும் ஷாம்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த பேஸ்டை உங்கள் தலைமுடியில் பூசி 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட வேண்டும். இப்படி வாரத்திற்கு நான்கு மறை செய்தால் முடி கருமையடைவதை உணர்வீர்கள். இது தவிர தலைமுடி ஆரோக்கியமாக வளரவும் ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |