பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் ஆபத்து? உடனே தடுக்க வேண்டுமா? இனி முழுசா தெரிஞ்சிக்கோங்க!
பல பெண்கள் வெள்ளைப்படுதல் நோயினால் அவதியுற்று வருகின்றனர்.
பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று நோயால் தான் வெள்ளைப்படுதல் ஏற்படுகின்றது.
சாதாரண பிரச்சினை என்று அலட்சியமாக விட்டு விடக் கூடாது.
ஆபத்தாக மாறும் வெள்ளைப்படுதல்
பெண்களின் பிறப்புறுப்பின் செல் சுவர்களில் பிசு பிசுப்பான திரவமானது இயற்கையாகவே சுரக்கிறது. இந்த அமிலத்தன்மை கொண்ட திரவமானது நோய்களை எதிர்த்து போராடும்.
இந்த திரவத்தில் நோய் தொற்று ஏற்படும் நிலையில் வேறு நிறங்களில் இந்த திரவம் வெளியேறுகிறது. இதுவே வெள்ளைப்படுதல் என அழைக்கப்படுகிறது.
வெள்ளைப்படுதலை குணமாக்கும் இயற்கை மருந்துவ பொருட்கள் உள்ளன. அது குறித்து இனி பார்க்கலாம்.
வெந்தயம்
வெந்தயமானது வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தும். வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து பருகி வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
வெண்டைக்காய்
வெண்டைக்காயை தண்ணீரில் கொதிக்கவைத்து அரைத்து தயிரில் ஊற வைத்து சாப்பிடுங்கள்.
கொத்தமல்லி
கொத்தமல்லி விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது வெள்ளைப்படுதலுக்கு நல்ல சிகிச்சை முறையாகும்.
துளசி
துளசியை தண்ணீரில் அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம். இந்த பானத்தை தினமும் இரண்டு முறை சாப்பிடுவதன் மூலம் வெள்ளைப்படுதலை சரி செய்ய முடியும்.
அரிசி நீர்
வேகவைத்த அரிசியின் நீரை தொடர்ந்து குடித்தாலும் வெள்ளைப்படுதல் பிரச்சினை குணமாகும்.
இந்த நோய் வருவதற்கான காரணங்கள்
- தவறான உணவுப் பழக்கங்கள்
- கெட்டுப்போன உணவுப் பொருட்களை சாப்பிடுதல்
- சுகாதாரமற்ற உள்ளாடைகள்
- சுய இன்பம் காணுதல்
- மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்
- ஊளை சதை உள்ளவர்கள்
- ரத்த சோகை உள்ளவர்கள்
- உடலில் அதிக உஷ்ணம்
- அதிக உடலுறவில் ஈடுப்படும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுகின்றது.
உணவு முறைகள் மூலமாகவும் குணப்படுத்த முடியும்.
- கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- சரியான நேரத்தில் உப்புக், காரம் குறைந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்.
- எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்களை எடுத்துகொள்ளுங்கள்.
- மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.
- இளநீர், தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.
எச்சரிக்கை
வெள்ளைப்படுதல் ஆபத்தான நோயாகும். அதிகமாக திரவ வெளியேற்றம் இருக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது,