மாமியார் வீட்டிலும் ராணியாகவே வாழும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை, திருமண வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவயைில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே புகுந்த வீட்டிலும் மகாராணி போல் வாழும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி மாமியாருக்கே கட்டளையிடும் அதிர்ஷ்டம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் பிரகாரம் அவர்களின் இயல்பு மிகவும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டதாகவே இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் தலைமை வகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், முன்னால் இருப்பவர்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எப்படி ஆட்டி வைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.அவர்களின் இந்த குணம் புகுந்த வீட்டிலும் இவர்களின் ஆதிக்ம் நிலைத்திருக்க காரணமாகின்றது.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே புத்திசாலிகளாகவும், திருமண விஷயம் என்று வரும் போது அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள்.
ஜோதிடத்தின் அடிப்படையில் கன்னி ராசி பெண்கள் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாகவும் எதிலும் நேர்த்தியையும் முழுமையையும் விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் காரணமாக திருமணத்திற்குப் பின்னர் அவர்கள் தங்கள் கணவர்களால் நேசிக்கப்படுகிறார்கள். இவர்களின் பேச்சுக்கு புகுந்த வீட்டில் மரியாதையும் முக்கியத்துவமும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் ஒருபோதும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதை விரும்புவதில்லை.
ஜோதிடத்தின் பிரகாரம் விருச்சிக ராசி பெண்கள் தங்கள் சுதந்திரத்திற்கு இடையில் அனுமதிப்தே கிடையாது. இவர்களின் இந்த குணம் காரணமாக புகுந்த வீட்லும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வார்கள்.
அவர்களின் ஆளுமை சற்று கடினமானதாக இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நபரின் வீட்டை நிச்சயம் மகிழ்ச்சியால் நிரப்புவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
