எளிதில் ஏமாறக்கூடிய டாப் 3 ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுக்கும் ஒவ்வொருவரும் நிறம், தோற்றம், உயரம், ஆளுமைகள், திறமைகள் என அனைத்திலும் தனித்துவ தன்மையை கொண்டிருப்பதை போலவே அவர்களின் இயல்பான நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் வேற்றுமைகளை கொண்டிருப்பது இயல்பு தான்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, திறமைகள் மற்றும் இவர்களின் தனிப்பட்ட குணங்களில் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் யார் எது சொன்னாலும் அப்படியே நம்பி ஏமாறும் அப்பாவி குணம் கொண்ட இளிச்சவாய் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்

மீன ராசியில் பிறப்பெருத்தவர்கள் அதீத கற்பனை திறனுக்கும் கருணை மற்றும் இரக்க குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களிடம் யார் உதவி என்று கேட்டாலும் தயங்காமல் செய்யும் மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணமே இவர்கள் வாழ்வில் அதிக ஏமாற்றங்களை சந்திக்க முக்கிய காரணமாக இருக்கும். இவர்களின் இரக்க குணத்தை மற்றவர்கள் தங் களின் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள நேரிடும்.
தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்களின் சுதந்திர குணத்துக்கும் உதவி செய்யும் பண்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த விடயத்தையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவார்கள். இவர்களின் குடும்ப சூழல், பொருளாதார நிலை என எதிலும் ரகசியம் காக்காது மற்றவர்களிடம் பகிரும் குணத்தால் அதிகம் ஏமாற்றப்படுவார்கள்.
இவர்களின் வெளிப்படை தன்மையால் இவர்களின் ரகசியங்களை தெரிந்துக்கொண்டு அதனை இவர்களுக்கு எதிராகவே பல சமயங்களில் மற்றவர்கள் பயன்படுத்தக்கூடும்.
கடகம்

உதவி செய்தே ஏமாந்து போவதில் கடக ராசியினரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்றால் மிகையாகாது.
இவர்கள் தங்களுக்கு இல்லாத போதும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த உதவி செய்யும் மனபான்மையாலையே பல சந்தர்ப்பங்களில் பிரச்சினையில் சிக்கிக்கொள்வதுடன் ஏமாற்றங்களையும் சந்திக்கின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |