இந்த ராசி பெண்கள் புகுந்த வீட்டிற்கு பெற்காலத்தை கொடுப்பாங்க! இவங்க கிடைச்சா விட்றாதீங்க
பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமண வாழ்க்கை, காதல், தொழில், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்வதால், அவர்களின் கணவன் ராஜயோகத்தை பெரும் வாய்ப்பை பெறுவார். இவர்கள் புகுந்த வீட்டை மகிழ்ச்சியாலும், செல்லத்தாலும் நிரம்பும் பேரதிஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி திருமணத்தின் பின்னர் தங்கள் கணவனின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே பொறுப்பான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.
உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்த்தில் பிறப்பெடுத்தவர்கள் என்பதால், இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
இவர்கள் திருமணத்துக்கு பின்னர் தங்கள் கணவனுக்கு பேரதிஷ்டத்தை கொடுக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக மாறிவிடுவார்களாம். இவர்கள் திருமண உறவிலும் விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
கடகம்

கடக ராசி பெண்கள் இயல்பாகவே அதீத இரக்க குணம் கொண்டவர்களாகவும் திருமண பந்தத்தின் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் பெரும்பாலும் மக்களையும் சூழ்நிலைகளையும் படிக்கும் திறன் கொண்ட இவர்கள் மற்றவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
திருமணத்தை பொருத்தவரையில் இவர்களை மணக்கும் ஆணுக்கு வாழ்க்கை முழுவதும் பணத்துக்கு தட்டுப்பாடு இருக்காது. இவர்களின் வரவால் புகுற்த வீட்டுக்கு பொற்காலம் உண்டாகும்.
சிம்மம்

சிம்ம ராசிப் பெண்கள் தங்கள் வசீகரம் மற்றும் தன்னம்பிக்கைக்கு பெயர் பெற்றவர்களாகவும் பிறப்பிலேயே ராணி போன்ற மிடுக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அனைத்து கிரகங்களையும் ஆளும் சூரியனால் ஆளப்படுவதால், இயல்பாகவே இவர்கள் இருக்கும் இடத்தில் ராணியாக தான் வாழ்வார்கள். தங்களை சூழ்ந்து வாழ்பவர்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய இவர்கள் கணவனுக்கு ராஜயோகத்தை கொடுப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாலும், செல்வ செழிப்பாலும் நிச்சயம் நிரம்பியிருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |