திருமண வாழ்கையை ஜாம் ஜாம்னு மாற்றும் பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள், திருமண வாழ்க்கை மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் திருமண வாழ்க்கையில் நுழைந்தவுடன் கணவனுக்கு பேரதிஷ்டத்தை கொடுக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி திருமண வாழ்க்கையை நிதி மற்றும் மகிழ்ச்சியின் அடிப்படையில் அமோகமாக மாற்றிவிடும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடம் வாழ்நாள் முழுவதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் கணவருக்கும் புகுந்த வீட்டுக்கும் பெரும் அதிர்ஷ்டத்தை கொடுப்பார்கள். இவர்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும்.
இந்த ராசி பெண்கள் இயல்பாகவே சிறந்த நிதி முகாமைத்துவ அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் திருமண பந்தத்துக்கு மதிப்பளிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு வீட்டு சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் குடும்ப பொறுப்பு சற்று அதிகமாகவே இருக்கும்.
இவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களின் நிதி முகாமைத்துவ ஆற்றல் மற்றும் அன்பால், வாழ்க்கைத் துணைக்கு செல்வம், வெற்றி , மகிழ்ச்சி என வாழ்வில் அனைத்து இன்பங்களும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிக சுய மரியாதை கொண்டவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள்.
இவர்களின் ஆழ்ந்த அறிவாற்றலால், புகுந்த வீட்டை பொருளாதார ரீதியில் விரைவில் உயர்த்துவதுடன் மகிழ்ச்சிக்கும் பஞ்சமின்றி பார்த்துக்கொள்வார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் கவலைக்கும் பணத்தட்டுப்பாட்டுக்கும் வாய்ப்பே இருக்காது. இவர்கள் வாழ்க்கை துணைக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை பொற்றுக்கொடுப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
