விண்வெளி வீராங்கனைகள் எப்படி தலைக்கு குளிப்பார்கள்? ஏன் தலை முடியை கட்டுவதில்லை?
விண்வெளியில் 9 மாதங்கள் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோரை ஸ்பேஸ் எக்ஸின் உதவியால் நாசா மீட்டுள்ளது. இவர்கள் பூமிக்கு திரும்பியதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடி வருகின்றன.

9 மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்... வைரலாகும் நடிகர் மாதவனின் நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில் விண்வெளி வீரர்கள் தங்களின் அன்றாட வேலைகளை எப்படி செய்துக்கொள்வார்கள் என்ற சந்தேகம் பெரும்பாலானர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுவாக நம்முடைய அன்றாட வாழ்க்கையில் குளிப்பது, இயற்கையின் அழைப்புகளுக்குப் பதிலளிப்பது போன்ற செயல்களைச் செய்வது நமக்கு எளிமையானதாக இருக்கலாம். ஆனால், விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு இது சாதாரண விஷயமே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? இது தொடர்வில் விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
குளிப்பதற்கு என்ன வழி?
காலைக்கடனைக் கழிக்க கழிப்பறையை பயன்படுத்துவது, தலைமுடியைச் சுத்தம் செய்வதற்கான தலைக்கு குளிப்பது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட விண்வெளியில் மிகவும் கடினமான விடயமாக இருக்கும்.
காரணம் விண்வெளியில் ஜீரோ அல்லது மைக்ரோ கிராவிடியில் அன்றாட வேலைகளை செய்வது நமது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது.
சுனிதா வில்லியம்ஸ் உள்பட சில விண்வெளி வீரர்கள் எப்படி தலைக்கு குளிப்பார்கள் என்கிற சந்தேகம் உங்களுக்கும் இருக்கலாம்.
விண்வெளி வீரர்கள், வீராங்கனைகள் தலைக்கு குளிக்கும் போது நோ ரின்ஸ் ஷாம்பூவை பயன்படுத்துகின்றார்கள். அதாவது, இந்த ஷாம்பூவை தலையில் தடவி சுத்தம் செய்வதற்கு தண்ணீரே தேவைப்படாது. தலையும் சுத்தமாகிவிடும்.
விண்வெளி வீரர்கள், இந்த ஷாம்பூவை தலையில் கைகளால் தடவிவிட்டு பின்னர் டவலால் அதனை துடைத்து விடுவார்கள்.
அதுமட்டுமன்றி விண்வெளி வீராங்கனைகள், அங்கிருந்து வெளியிடும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களில் எப்போதும் தலைமுடியை விரித்து போட்டவாறு இருப்பார்கள்.
அதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கின்றீர்களா? காரணம் விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் அவர்களின் கூந்தல் முகத்தை மறைத்து தொந்தரவாக இருக்காது. இதனால் அவர்கள் போனி டெயில் அல்லது கொண்டை போட வேண்டிய அவசியம் கிடையாது.
விண்வெளிக்கு செல்பவர்கள், ஸ்பாஞ்சை வைத்து சோப்பால் உடலை சுத்தப்படுத்துவார்கள். இவர்கள் பெரும்பாலும் தண்ணீரை பயன்படுத்தி குளிக்க மாட்டார்கள்.
அப்படி தண்ணீரை பயன்படுத்தினாலும் அதனை துளியும் சிந்தாமல் பயன்படுத்த வேண்டும். காரணம் விண்வெளியின் புவியீர்ப்பு விசை இல்லாததால். இவர்கள் உபயோகிக்கும் தண்ணீர் ஆங்காங்கே சுற்றிக்கொண்டே இருக்கும். அது காய்ந்தும் போகாது. எனவே, பெரும்பாலும் டவல் அல்லது நாப்கின் போன்றவற்றை வைத்தே தங்களை சுத்தப்படுத்திக் கொள்வார்கள்.
விண்வெளிக்கு செல்பவர்கள் மிகுந்த அறிவாற்றலுடன் மட்டுமன்றி நிச்சயம் மிகுந்த அர்பணிப்பு உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள்.இது நினைக்கும் அளவுக்கு அவ்வளவு எளிதான விடயம் கிடையாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
