பிடிவாத குணத்தால் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி அவர்களின் எதிர்காலத்திலும் ஆளுமையிலும் பாரியளவு தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் சில ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருக்கும் அதே சமயம் பிடிவாத குணத்தால் வெற்றியடையும் தன்மையையும் இயல்பாகவே கொண்டிருப்பார்கள் அப்படிப்படட ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
பொதுவாகவே மேஷ ராசியினர் எதற்கும் அஞ்சாதவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.
இந்த ராசியை சேர்ந்த பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்கும் அதே நேரத்தில் பொறுப்பானவர்களாகவும் இருக்கும் தன்மையுடையவர்கள்.
இவர்களின் மன உறுதியும், விடா முயற்சியும் பார்ப்பவர்களுக்கு பிடிவாத குணம் போன்று தோற்றமளிக்கும்.
எந்த விடயத்தையும் விட்டுக்கொடுக்காது வெற்றியை அடைந்தே ஆக வேண்டும் என்ற குணம் இவர்களுக்கு பிறப்பிலேயே இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியை சேர்ந்த பெண்கள் பார்பதற்கு எளிமையாக இருக்க விரும்பும் அதே நேரம் மிகவும் உறுதியுடையவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் சிறந்த மனைவியாகவும் தோழியாகவும் இருப்பார்கள். உறவில் மிகவும் விசுவாசமாக நடந்துக்கொள்வார்கள்.
துணையிடம் உண்மையாக இருக்கும் இவர்கள் மற்றவர்களிடமும் அதனை எதிர்பார்க்கும் தன்மை கொண்டவர்கள்.
தனித்துவமான பண்புகளையும் பழக்கங்களையும் கொண்ட இவர்களை யாராவது கட்டுப்படுத்தினால் மிகவும் பிடிவாதமாக அதனை தகர்த்து விடுவார்கள். தங்களின் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்ற பண்பு இவர்களிடம் காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்களிடம் இயற்கையாகவே தலைமைப் பண்பு காணப்படும். அன்புக்குரியவர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தங்களுக்கு பிடித்தவர்ளின் விடயங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள். செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் மிகவும் பிடிவாதமாக அதனை செய்தே முடிப்பார்கள்.இவர்களின் இந்த குணமே பல நேரங்களில் இவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் உறுதியானவர்களாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் வலுவான கருத்துகள் மற்றும் உணர்ச்சிகளை பாதுகாக்க விரும்புவார்கள் இதனால் மற்றவர்கள் இவர்களை பிடிவாதமானவர்கள் என நினைக்கலாம்.