இதுல நீங்க எப்படி கை மடித்து வைப்பீர்கள் சொல்லுங்க - உங்களை பற்றி சொல்கிறோம்
ஒவ்வொருவருக்கும் தங்களின் ஆளுமை குணத்தை மற்றவர்கள் கணித்து கூறும் போது, அதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். பொதுவாக ஒருவரது குணங்களை அந்நபரின் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு அறியலாம்.
ஆனால் ஆளுமை பற்றி உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்தின் அமைப்பும் கூறும். உடல் பாக அமைப்புக்கள் நம் குணத்தையும் ஆளுமையையும் கூறும் ஒரு சாவியாகும்.
பொதுவாக ஒவ்வொரு நாட்டிற்கும் மனிதர்களின் நிறங்களை உறுப்பின் அடையாளங்களை வைத்து அவர்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள் இப்படிப்பட்டவர்கள் என வேறுபடுத்துகிறோம்.
அந்த வகையில் அஒருவார் கைகளை மடித்து நிற்கும் விதத்தைக் கொண்டு, அந்நபரின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை இப்படி தான் இருப்பார்கள் என ஆளுமையை வேறுபடுத்தலாம். அதனை தொடர்ந்து பார்க்கலாம்.

இடது கையின் மேல் வலது கை
நீங்கள் நிற்கும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும் போதோ, இடது கையின் மேல் வலது கையை போடுபவரானால், நீங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை மதிப்பீர்கள். ஆனால் அவ்வளவு எளிதில் வளைந்து கொடுக்கமாட்டீர்கள்.
நன்கு லாஜிக்காக யோசித்தே முடிவெடுப்பீர்கள். மேலும் நீங்கள் மூளையின் இடது பக்கத்தையே அதிகம் பயன்படுத்துவீர்கள். பொறுப்பு, ஒழுங்காக எதையும் செய்வது போன்றவற்றிற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பீர்கள்.
நீங்கள் எப்போதும் வாழ்க்கையை ஒரு முறையான அணுகுமுறையுடன் அணுக விரும்புவீர்கள். எப்போதும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காமல், எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை சமாளித்து, நன்கு யோசித்தே முடிவெடுப்பீர்கள்.

வலது கையின் மேல் இடது கை
நீங்கள் நிற்கும் போதோ அல்லது உட்கார்ந்திருக்கும் போதோ, வலது கையின் மேல் இடது கையை போடுபவரானால், அதிகமாக உணர்ச்சிவசப்பீர்கள்.
வலுவான அறிவாற்றல் திறன்களைக் கொண்டிருப்பீர்கள். ஆழமான உள்ளுணர்வைக் கொண்டவர்கள். உங்கள் மூளையின் வலது பக்கத்தைப் பயன்படுத்தி, உங்கள் வாழ்வில் உணர்வுகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து நடப்பீர்கள்.
எந்த ஒரு முடிவுகளை எடுக்கும் போதும் லாஜிக்காக யோசிக்காமல் இருக்கமாட்டீர்கள். இருப்பினும் உங்களின் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ, அதன்படி நடக்க விரும்புவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |