இந்த ராசியினரின் கோபம் மிகவும் ஆபத்தானதாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!
மனிதனின் மிகப்பெரிய பகைவன் அவர்களின் சொந்த கோபமே என்று அறிஞர்களும், பழமையான நூல்களும் குறிப்பிடுகின்றன. ஒரு கண நேரத்தில் வெளிப்படும் கோபம் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.
கோபம் மிகப்பெரிய சாதனைகளையும் உறவுகளையும் அழிக்கும் சக்தியாக மாறக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நெருப்பைப் போலவே கட்டுப்பாடற்ற கோபமும் அழிவை ஏற்படுத்தும்.

ஜோதிட நம்பிக்கைகளின்படி, கோபம் என்பது நெருப்பைப் போன்ற தீவிரமான உணர்வாக கருதப்படுகிறது. இது செவ்வாய் மற்றும் சூரியன் போன்ற கிரகங்களின் தாக்கத்தால் உருவாகும் ஒரு குணமாக சிலர் நம்புகின்றனர்.
அந்தவகையில் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே கோபம் வரும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களின் கோபம் கட்டுப்பாடற்றதாகவும் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். அப்படி மிருகத்தையே மிஞ்சும் அளவுக்கு மூர்க்கத்தனமான கோபப்படும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையும் கம்பீரமும் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் ஈகோ பாதிக்கப்படும்போது, சிறிய விஷயங்கள்கூட பெரிய மோதலாக மாறும். கட்டுப்படுத்தப்படாத கோபம் அவர்களுக்கும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இவர்கள் இயல்பிலேயே தங்களுக்கு மரியாதையும் அதிக முக்கியத்துமும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காத போது இவர்களின் கோபம் மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கும்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் அன்பும் உணர்ச்சியும் நிறைந்தவர்கள். ஆனால் தங்கள் மனக்கசப்புகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்தால், ஒருகட்டத்தில் அது தீவிரமான கோபமாக வெடிக்கலாம்.
இந்த ராசியினர் சாதாரணமாக மிகவும் பாசமும் இரக்கமும் நிறைந்தவர்க இருப்பார்கள்.ஆனால் இவர்களுக்கு நம்பிக்கை துரோகம் நடப்பதை அறிந்தால் இவர்களின் கோபம் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதாக இருக்கும்.
விருச்சிகம்

செவ்வாயின் தாக்கம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான உணர்வுகளும் உறுதியான குணமும் கொண்டவர்கள்.
துரோகம் அல்லது மனவேதனையை சந்திக்கும் போது, அவர்களின் கோபம் ஆழமானதாகவும் தீவிரமானதாகவும் வெளிப்படலாம்.