இந்த ராசிக்காரர்களுக்கு காதலர் தினத்தில் துணை கிடைக்குமாம்! உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே காதல் என்ற வார்த்தையில் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு காணப்படுகின்றது. அதனால் தான் அனைவரும் காதல் செய்வதையும், மற்றவர்களால் காதலிக்கப்படுவதையும் விரும்புகின்றோம்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளில் வாழ்ககையிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில், இந்த காதலர் தினத்தில் தனிமையில் இருக்கும் குறிப்பிட்ட சில ராசியினருக்கு காதல் துணை அமைய அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
அப்படி காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் திகதி எந்தெந்த ராசியினரின் காதல் கைகூடும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே தலைமைத்து குணங்கள் அதிகம் கொண்டவர்களாகவும், யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளாதவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்களை நொயில் கவரும் அளவுக்கு வசீகரமான தோற்றம் கொண்ட இவர்கள் இந்த காதலர் தினத்தில் தங்களின் வாழ்க்கை துணையை கண்டுகொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
காதல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர்கள் துணைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள்.
இதுவரை எந்த காதலும் அமையவில்லை என்றால், சுக்கிரனின் ஆசீர்வாதத்தால், இந்த காதலர் தினத்தில் இவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை அமைய வாய்ப்பு காணப்படுகின்றது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதற்காகவும் தங்களின் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் மிகவும் உருதியாக இருப்பார்கள்.
அவர்கள் காதல் உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருக்கின்ற போதும், சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற காரணத்தால் எளிதில் எந்த உறவிலும் சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
இந்த ராசியின் அதிபதியான குரு பகவான், இந்த காதலர் தினத்தன்று உறவு வீட்டில் செல்வாக்கு செலுத்துவதால் இவர்களின் காதல் துணையை அடையும் வாய்ப்பை பெறுகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![முதன்முறையாக விமானத்தை ஓட்டும் பைலட்டின் சட்டை கிழிக்கப்படுவது ஏன்?](https://cdn.ibcstack.com/article/24b66abf-6677-459c-b9ce-1e1f33b18c9b/25-67ae080907cc3-md.webp)