இந்த ராசியினரிடம் பாடுபட்டு சேர்த்தாலும் காசு தங்காது.. ஏன் தெரியுமா?
பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் சிலருக்கு எவ்வளவு பணம் சம்பாரித்தாலும், அதனை சரியாக பயன்படுத்த தெரியாவிட்டால் அனைத்தும் பழாகி விடும்.
பணத்தை சேமிப்பது, புத்திசாலித்தனமாக செலவு செய்வது என்பது எல்லோராலும் முடியாது. ஒரு சிலர் மாத்திரமே இவை அனைத்தையும் சரியாக செய்து பணக்காரர்களாகிறார்கள்.
ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பணத்தை எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அவர்களுக்கு சேமிப்பது எப்படி என்று தெரியாது எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், எவ்வளவு பணம் சம்பாரித்தாலும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்பவர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஊதாரிகளாக வாழும் ராசியினர்
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் ஒரு பொருளை வாங்க விரும்பினால் அது உண்மையிலேயே உங்களுக்கு தேவையா? என யோசிக்காமல் வாங்கி விடுவார்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இதனால் உங்களின் பணம் தண்ணீர் போன்று கரையும். |
மிதுனம் | ஜோதிடத்தின் படி, மிதுன ராசியில் பிறந்தவர்கள் பணத்தை அதிகமாக செலவு செய்வார்கள். தொழில்நுட்ப சாதனங்கள் அல்லது ஃபேஷன் பொருட்கள் வாங்குவதில் அதிகமாக ஈடுபாடு காட்டுவார்கள். அந்த பொருட்களுக்கா பயன்படுத்தப்படும் பணத்தின் அளவு அதிகமாக இருப்பதால் பணம் சேமிப்பில் இருக்காது. |
சிம்மம் | சிம்ம ராசிக்காரர்கள் ஆடம்பர பொருட்களுக்கு அதிகமாக பணம் செலவழிப்பார்கள். இவர்கள் சொகுசு கார், விலையுயர்ந்த நகைகள் போன்றவற்றை அதிகமாக வாங்குவார்கள். இந்த பழக்கம் அவர்களிடம் உள்ள சேமிப்பை பாதிக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும், அதனால் பலன் இருக்காது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).