மனைவியை உயிராய் நினைக்கும் டாப் 3 ஆண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமண வாழ்க்கை, கல்வி, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இத்தகைய ஆண்கள் திருமணத்தின் பின்னர் மனைவி யின் மீது உண்மையாக அக்கறையும் அன்பையும் கொண்டவர்களாக இருபார்கள்.
அப்படி மனைவியை எந்த குறையும் இன்றி கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறை கொண்ட ஆண் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள் மிகவும் விசுவாசமும் முழுமையான அர்ப்பணிப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே காதல் விடயத்தில் மிக நேர்மையானவர்களாகவும், மனைவியை உயிருக்கு நிகராய் மதிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
நீங்கள் ஸ்திரத்தன்மை, ஆடம்பரமான வாழ்க்கை, குறையாத அன்பு ஆகியவற்றை மதிக்கும் ஒருவரைத் தேடுகிறீர்கள் என்றால், ரிஷப ராசி ஆண் நல்ல பொருத்தமாக இருப்பார்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி ஆண்கள் மிகவும் அன்பும் பாதுகாப்பு உணர்வும் கொண்டவர்கள். மற்ற ராசிகளுடன் ஒப்பிடும்போது குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள்.
அவர்களின் உலகமே குடும்பம் என்று சொல்லலாம்; குடும்ப நலனுக்காக எப்போதும் முன்னுரிமை கொடுப்பார்கள். குறிப்பாக மனைவியை எல்லாவற்றுக்கு மேலான நினைப்பார்கள்.
சிந்தனையில் நிலைத்தன்மையும், அன்பும், குடும்ப பாசமும் கொண்ட ஒரு கணவரை விரும்பினால், கடக ராசி ஆண் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கலாம்.
கன்னி

கன்னி ராசி ஆண்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும், குறிப்பாக உறவுகளில் கூட, முழுமையை எதிர்பார்ப்பவர்கள்.
கூர்மையான சிந்தனை திறன் கொண்டவர்கள்; அன்பும் நகைச்சுவை உணர்வும் உள்ளவர்கள், மற்றவர்களின் நலனில் உண்மையான அக்கறை காட்டுவார்கள்.
தங்கள் துணையின் வாழ்க்கையை எளிதாக்க எப்போதும் முயற்சி செய்வார்கள். ஒழுங்கான, திட்டமிட்ட திருமண வாழ்க்கையும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக அணுகும் ஒரு துணையும் வேண்டுமென்றால், கன்னி ராசி ஆண் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |