இந்த ராசி ஆண்கள் அப்பாவாக கிடைப்பது பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், கல்வி, விசேட திறமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்ககளில் நேரயாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறப்பெடுத்த ஆண்கள் தங்களின் குழந்தைகளுக்கான உயிரையும் கொடுக்கும் அளவுக்கு தியாக உள்ளம் கொண்ட சிறந்த தந்தையாக இருப்பார்கள்.

அப்படி தங்களின் பிள்ளைகளுக்காக வாழ்க்கையையே அர்பணித்து வாழும் உன்னத குணம் கொண்ட அப்பா மார்கள் எந்த ராசியினர் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் தங்களின் இளமை காலத்தில் எப்படி இருந்தாலும், ஒரு குழந்தைக்கு தந்தையான பின்னர் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.
இவர்கள் தங்களின் குழந்தைகளின் சந்தோஷத்துக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற தங்களின் விரும்பு வெறுப்புகளை கடந்து கடினமாக உழைப்பார்கள்.
இவர்கள் மிகவும் பாசமான பெற்றோர்களில் ஒருவராக அறியப்படுகின்றார்கள். ஒரு தந்தையாக, தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணர்வது அவர்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கும்.
மிதுனம்

ஒரு தந்தையாக, மிதுன ராசிக்காரர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் என்பவற்றை பரிசளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் விருப்பங்களையும், தேவைகளையும் முற்றிலும் மறந்மு தங்களின் பிள்ளைகளுக்காகவே வாழும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் அப்பாவாக தங்களின் பொறுப்புக்களையும், கடமைகளையும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
கடகம்

கடக ராசித் தந்தையர்களுக்குக் குடும்பத்துடன் செலவிடும் நேரமே மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
இவர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும், தங்களின் பிள்ளைகளுடன் ஒரு மணிநேரம் விளையாடுவதையே மகிழ்ச்சியாக நினைப்பார்கள்.
தங்களி்ன் பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதைனை தீர்க்க தங்களின் சொத்து மொத்தத்தையும் கூட அழிக்க தயாராக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |