விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு : முழங்காலிட்டபடி ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி விஜய் பிரார்த்தனை!
திருச்சி வயர்லெஸ் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் திருச்சி நடிகரும் தவெக தலைவருமான விஜய் முட்டி போட்டு நடந்துவந்து பிரார்த்தனை செய்துள்ள காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்று விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கும் விசாரணைக்கு வந்தது.

ஆனால் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருதில் கொண்டு விவாகரத்து வழக்கு ஜூன் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முழங்காலில் நடந்து பிராத்தனை
இந்நிலையில், விஜய், இன்று தனது இறுதிக்கட்டத் தேர்தல் பரப்புரைக்காக திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய விஜய், அங்கிருந்து நேரடியாக விமான நிலைய வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்று உருக்கமான பிராத்தனையில் ஈடுப்பட்டுள்ளார்.

முழங்காலிட்டே பீடத்தை நோக்கி நகர்ந்து சென்று, மெழுகுவர்த்தி ஏற்றி, தான் போட்டியிடும் முதல் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைக்க வேண்டும் என நீண்ட நேரம் மண்டியிட்ட நிலையில் உருக்கமாகப் பிரார்த்தனை செய்துள்ளார்.
விஜய் இவ்வாறு கடுமையான பிராத்தனையில் ஈடுபட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |