இந்த ராசி ஆண்கள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை, நேர்மறை எதிர்மறை குணங்கள் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்களாகலும் எல்லவற்றுக்கு தயக்கம் காட்டுபவர்களாவும் இருப்பார்களாம். அப்படிப்பட ஆண் ராசிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் எப்போதும் முழுமையை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் பூரணமானவும் நேர்த்தியாகவும் செய்ய விரும்புவார்கள்.
அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களின் அங்கீகாரத்தை விட தங்களின் திருப்திக்கும் சுதந்திரத்துக்கும் அதிக முக்கியத்தும் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் அதிக கூச்ச சுபாவம் இருப்பதால், எப்போதும் திரைக்குப் பின்னால் வேலை செயவதையே விரும்புவார்டகள்.
குறிப்பாக அறிமுகமில்லாத சூழல்களில், வெளிப்படையாக இருப்பது மற்றவர்களுடன் வெளியில் செல்வது இவர்களுக்கு சற்று அசௌகரியமான விடயமாக இருக்கும்.
கடகம்
கடக ராசி ஆண்கள் எப்போதும் பாதுகாப்பை உறுதிசெய்துக்கொள்வதில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்களை சிறந்தவர்களாக மற்றவர்களிடம் காட்டிக்கொள்வதை விரும்புகின்ற போதிலும் மங்களின் தயக்கம் மற்றும் கூச்ச சுபாவம் காரணமாக தங்கள் மனத்தடைகளை அகற்ற வாழ்வில் போராடுகிறார்கள்.
காதல் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் இதிகம் தயக்கம் காட்டும் பண்பு இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும் தங்களை தாங்களே அதிகம் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் பழிசொல்லுக்கு ஆளாவதை ஒருபோதும் விரும்புவது கிடையாது. அதனால் எந்த விடயத்தை முன்னெடுக்கவும் அதிகமாக தயக்கம் காட்டுவார்கள்.
இந்த ராசியினர் பிரபலத்தைத் தேடுவதில்லை அல்லது தேவையற்ற கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதிப்பது கிடையாது இவர்கள் அதை தான் தங்களின் சுதந்திரம் என கருதுகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |