இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்?
ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதைபோல் ஒருவர் பிறந்த மாதம் மற்றும் திகதியும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை நிதி நிலை என்பவற்றில் பெருமளவில் தாக்கம் செலுத்தும் என ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்துக்கு பின்னர் கோடீஸ்வர்களாகும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்பப்படுகின்றது.
அப்படி திருமணத்தின் பின்னர் நிதி நிலையில் அசுர வளர்ச்சியடையும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பிப்ரவரி
காதல் கொண்டாட்டங்கள் நிறைந்த பிப்ரவரி மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் மென்மையாக குணம் கொண்டவர்களாகவும் அதே நேரத்தில் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை கொண்டவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் பொறுப்புள்ளவர்களாக மாறுகின்றார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே காதல் மீதும் வாழ்க்கை துணை மீதும் மரியாதை கொண்டவர்களாக இருப்பதால் துணையை சிறப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றது.
மே
மே மாதத்தில் பிறந்த ஆண்கள் கடின உழைப்பாளிகளாவும் ஆடம்பர வாழ்க்கையின் மீது ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் திருமணத்திற்குப் பிறகு அவர்களின் நிதி நிலை உயர்வடைவதற்கு பெரிதும் துணைப்புரியும்.
இவர்கள் இயல்பாகவே சிறந்த நிதி முகாமைத்துவ குணம் கொண்டவர்களாக இருப்பாதால், திருமணத்தின் பின்னர் பொறுப்புகளை சரியாக கையாண்டு செழிப்பாக வாழ்க்கையை வாழ்வார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே வசீகர தோற்றம் கொண்டவர்களாகவும், உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
திருமணத்திற்கு பின்னர் பொறுப்பு அதிகரிப்பதால், சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் இணக்கமான உறவுகளைப் பேணுவம் குணம் இவர்களிடம் அதிகரிக்கும்.
இவர்களின் பக்குவம் இவர்களை விரைவில் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாற்றுகின்றது. திருமணத்துக்கு பின்னர் இவர்கள் தங்களிகளின் இலக்குகளை அடைவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |