இந்த ராசியினர் தெரிந்தே தவறு செய்யும் மோசமான குணம் கொண்டவர்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!
பொதுவாகவே மனிதர்களா பிறந்த அவைரும் வாழ்வில் தவறு செய்வது இயல்பாக விடயம் தான். ஆனால் அதனை தவறு என்று உணர்ந்த பின்னர் அதனை திருத்திக்கொண்டு நல்ல பாதையை தேர்ந்தெடுப்பதே சிறந்த மனிதனின் குணமாக இருக்க வேண்டும்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியினர் தாங்கள் செய்யும் விடயத்தில் இருக்கும் தவறை உணர்ந்தாலும் கூட அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்காகவும், சுயநலம் கருதியும் அதனை தொடரும் மோசமான குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி வாழ்வில் அதிக தவறுகளை தெரிந்தே செய்யும் ராசியினர் யார் யார் எனவும்,இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்கள் தொடர்ப்பாகவும் விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
மேஷம்

போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள், அவர்களின் தொலைநோக்கு மனப்பான்மை மற்றும் தைரியத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் இயல்பாகவே அனைத்திலும் முதலாவதாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும்.
இவர்கள் தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் தெரிந்தே தவறு செய்யவும் தயக்கம் காட்ட மாட்டார்கள். இவர்களை பொருத்தமட்டில் எந்த இடத்திலும் தாங்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும்.
மிதுனம்

கிரகங்களின் இளவரசாரன புதனால் ஆளப்படும் மிதுனம் தனது புத்தி கூர்மைக்கும், இரட்டை இயல்புக்கும் பெயர்பெற்றதாக இருக்கும்.
இவர்கள் தங்களுக்கு தேவையான விடயங்களை சாதித்துக்கொள்ள மற்றவர்களை தெரிந்தே சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சுயநலனுக்காக மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது பிழை என்பதை நன்கு அறிந்திருந்தாலும் கூட இவர்களால் இந்த குணத்தை மாற்றிக்கொள்ள முடியாது.
இவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங்களில் ஈடுபட நினைப்பதும் இவர்களின் இந்த எதிர்மறை குணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
தனுசு

அதிர்ஷ்டத்தின் கிரகமான குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் தங்களின் சுதந்திர தாகத்துக்கும் சாகச இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் நொடிக்கு நொடி மாறும் மனநிலை கொண்டவர்களாகவும், சில நேரங்களில் முன்பின் தெரியாத விஷயங்களில் சாகச நோக்கம் கருதி ஈடுபடும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் மனநிலையை எளிதில் மாற்றிக்கொண்டால் மற்றவர்களின் உணர்வுகள் அதனால் காயப்படக்கூடும் என்று தெரிந்தே அதை செய்கின்றார்கள். இவர்களின் இந்த குணம் முற்றிலும் சுயநலமானதாகவே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |