நண்பர்களுடன் வதந்திகளை கிசுகிசுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிடசாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் நண்பர்களுடன் கிசு கிசுப்பதை அதிகமாக விரும்புவார்களாம்.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையவர்கள்.
குறிப்பாக வதந்திகளை கிசுகிசுப்பதிலும் இவர்கள் வல்லவரக்ளாக இருப்பார்கள், சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்வதில் இவர்களுக்கு அலாதி இன்பம் கிடைக்கின்றது.
சிம்மம்
சிம்ம ராசியினர் இயல்பாகவே தலைமைத்துவ பண்பு அதிகம் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் சமூக வட்டங்களில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்படுகின்றார்கள்.
இவர்கள் நண்பர்களுடன் அதிகமாக தங்களின் நேரத்தை செலவிடுவதையும் மற்றவர்களை பற்றி கிசுகிசுப்பதையும் விரும்புகின்றார்கள்.
துலாம்
துலாம் ராசியினர் எப்போதும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள்.
அவர்கள் மற்றவர்களின் விடயங்கள் குறித்து ஆராய்வதில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை கிசுகிசுக்க விரும்புவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |