மோசமான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்கள் ஆகியவற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு இயல்பாகவே எதிர் காலம் குறித்து முன்கூடடியே கணிக்க கூடிய ஆற்றல் காணப்படும்.
இவர்களின் உள்ளுணர்வு மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் எடுக்கும் முடிவு மிகவும் சரியானதாகவும் தெளிவானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசியினருக்கு இயற்கையாகவே சிக்கல்களை தீர்கும் ஆற்றலும் கடுமையான சூழ்நிலைகளை முகாமைத்துவம் செய்யும் ஆற்றலும் அதிகமாக இருக்கும்.
இவர்களிகளின் உள்ளுணர்வுகள் சக்திவாய்ந்ததாக இருப்பதால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் மிகவும் நேர்த்தியானதாக இருக்கும்.
விருச்சிகம்
புளூட்டோ கிரகத்தால் ஆளப்படும் விருச்சிக ராசியினர் எப்போதும் மர்மம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் உள்ளுணர்வு சக்தியானது மிகவும் கூர்மையானதாகவும் எதிர்காலம் குறித்து துள்ளியமாக கணிக்க கூடியதாகவும் இருக்கும். இவர்கள் முடிவெடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
மீனம்
நெப்டியூனால் ஆளப்படும் மீன ராசிகாரர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் உள்ளுணர்வு நடக்க போகும் விடயங்களை கூட கற்பனை செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். இவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் மிகவும் சரியானதாக அமையும்.
தனுசு
வியாழனால் ஆளப்படும் தனுசு ராசிகாரர்கள் இயல்பாகவே சுதந்திரமாக செயற்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் உலகத்தை பற்றிய கண்ணேட்டம் மற்றும் புரிதல் என்பன மிகவும் சரியானதாக இருக்கும்.
இவர்களின் உள்ளுணர்வு ஞானம் மிகவும் வலிமையானதாக இருக்கும். இதனால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |