திருமணத்துக்கு பின் ஜாக்பாட் அடிக்கணுமா? அப்போ இந்த ராசி பெண்களை தெரிவு செய்ங்க
பொதுவாகவே ஆண்களும் பெண்களும் திருமணத்திற்கு பின்னர் பல்வேறு மாற்றங்கள் சந்திக்க வேண்டி ஏற்படும் அந்தவகையில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அனைவருக்குமே மாற்றங்களை சந்திக்கின்றனர்.
ஆனால் ஜோதிர சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசி பெண்களை திருமணம் செய்துக்கொண்ட பின்னர் ஆண்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் எனவும் அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும் எனவும் ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு எந்தெந்த ராசி பெண்களை திருமணம் செய்துக்கொள்வது ஆண்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றார்கள். இந்த பெண்கள் கணவரின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையை புறட்டிப்போட கூடியவர்கள்.
மேஷ ராசியினர் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால், அத்தகைய பெண்கள் தைரியமானவர்கள், இவர்கள் கணவருக்கு அனைத்து சந்தர்ப்பத்திலும் உறுதுணையாக இருப்பார்கள்.
இவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு பண பற்றாக்குறை ஏற்படுவது மிகவும் அரிதானது.
ரிஷபம்
ரிஷபம் ராசிப் பெண்கள் தங்கள் கணவருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியவர்கள். ரிஷப ராசியினர் புத்திசாலிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களை திருமணம் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூற வேண்டும். திருமணத்திற்குப் பிறகு, இந்த பெண்கள் தங்கள் கணவர்களை ஆதரிக்கிறார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் பணத்திற்கு குறைவே இருக்காது.
கடகம்
கடக ராசியினரிடம் சகிப்புத்தன்மை அதிகமான காணப்படும். இவர்கள் மிகவும் அமைதியானர்கள்.
இந்த ராசிப் பெண்கள் எல்லா சூழ்நிலையிலும் கணவருக்கு தோளோடு தோள் கொடுப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு, கணவன் மற்றும் குடும்பத்தினரின் பார்வையில் அவர்களின் மரியாதை அதிகரிக்கிறது.
இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள்.
மகரம்
மகர ராசியினர் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.இவர்கள் இருக்கும் இடத்தில் வெற்றி வந்து சேரும். எந்த ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாலும் அதை முடித்த பின்னரே ஆறுதல் அடைகின்றார்கள்.
ஒரு மகர ராசி பெண் தன் கணவனின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறாள். இந்த பெண்கள் தங்களுக்கு முன் தங்கள் கணவர்களை நினைக்கிறார்கள்.
இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |